Drink Green Tea Instead Of Coffee : நம் அனைவருக்குமே வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், இந்த ஆசை பல சமயங்களில் நிராசையாகிவிடும். காரணம், நம் உடலுக்கு ஏற்றவாறு என்ன டயட் இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரியாது. இதில், வெயிட் லாஸிற்கு உதவ என சில பானங்கள் இருக்கின்றன. அந்த பானங்கள், நம் வீட்டிலேயே செய்து குடிக்க கூடியவையாக இருக்கும். அவை என்ன தெரியுமா?
காபிக்கு பதில் குடிக்க வேண்டிய அந்த பானம்..!
நம்மில் பெரும்பாலானோருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் இருப்பது பெரிய அளவில் தீங்கு விளைவிக்காது என்றாலும், வெயிட் லாஸ் செய்ய பல சமயங்களில் உதவாமல் போகலாம். எனவே, அதற்கு பதிலாக நாம் சில ஹெல்தியான பானங்களை குடிக்க வேண்டியது நல்லது. எனவே, தினமும் நீங்கள் காபிக்கு பதிலாக கிரீன் டீ குடித்து பார்க்கலாம் என சில ஃபிட்னஸ் நிபுணர்களும், சில மருத்துவர்களும் கூறுகின்றனர்.

கிரீன் டீ-யால் ஏற்படும் பலன்கள்:
வெயிட் லாஸ்:
சர்க்கரை கலந்த காபியை குடிப்பதற்கு பதில், வெறும் கிரீன் டீயை குடித்தால், கண்டிப்பாக அது உடல் எடை இழப்பிற்கு உதவுமாம். இது, உங்களின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு, கலோரியை குறைத்து, கொழுப்பு ஏறாமல் பார்த்துக்கொள்கிறது. அதே போல, உடலின் மெட்டபாலிசத்தையும் இது அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
சாந்தப்படுத்தும்..கவனத்தை அதிகரிக்கும்!!
கிரீன் டீயில் இருக்கும் அமினோ ஆசிட் சத்துகள், நம் உடலை ரிலாக்ஸ் செய்யும் பண்புகளை கொண்டுள்ளன. இதனால் நமக்கு கவனம் அதிகரித்து, உடலையும் சாந்தப்படுத்து. வேலை பார்க்கும் போது இதனால் முழு கவனத்தையும் வேலையில் மட்டும் செலுத்த முடியும்.
ஆசிட் சேராது:
நாம் தினந்தோறும் பல்வேறு உணவுகளை சாப்பிடுகிறோம். இதனால், எளிமையாக நமது வயிற்றில் கெட்ட ஆசிட் சத்துகள் சேரலாம். வயிறு கோளாறு, அஜீரணம், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் இதனால் உண்டாகலாம். இதனை சரிசெய்ய, கிரீன் டீயை குடிக்கலாம். இதன் காரணமாக வயிற்றில் கெட்ட ஆசிட் சேராமல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதயத்திற்கு நல்லது:
கிரீன் டீ குடிப்பவர்களையும், காபி மட்டும் குடிப்பவர்களையும் வைத்து சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், கிரீன் டீ குடிப்பவர்களின் இதயம் அதை குடிக்காதவர்களை விட நன்றாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரீன் டீ குடிப்பவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறைவாக வருவதாகவும், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் குறைந்து உள்வீக்கம் குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பதற்றம் குறையும்:
காபி அதிகம் குடிப்பவர்கள், தூக்க கோளாறுகளால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால், அவர்களுக்கு பதற்றம் மற்றும் நடுக்கம் அடிக்கடி வரலாம். இதய துடிப்பும் அவ்வப்போது எகிறலாம். ஆனால், கிரீன் டீயில் இருக்கும் கஃபைன் உடலுக்குள் செல்லும் போது மெதுவாக செல்வதால், அதனால் மிக சிறிய அளவிலான பக்க விளைவுகளே ஏற்படும் எனக்கூறப்படுகிறது. இதனால், பதற்றம் ஏற்படுவதும், நடுக்கம் ஏற்படுவதும் குறையுமாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க
மேலும் படிக்க | கடினமான நேர்காணல்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம்! 7 டிப்ஸை படிங்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









