Drink This Daily To Get Radiant Shining Skin : சரும பராமரிப்பு என்பது, வெளியில் இருந்து பார்க்கும் போது மிகவும் இலகுவான விஷயம் போல தெரியும். ஆனால் உண்மையில் அதை செய்து பார்க்கும் போதுதான் அது எவ்வளவு சிரமம் என்பதே தெரியும். அதிலும், சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கும் பெண்கள் பலர், தனக்கு தெரிந்த அனைத்து டிப்ஸ்களையும் உபயோகிக்க ஆரம்பித்து விடுவர். அப்படி அவர்கள் பின்பற்றும் விஷயங்களுள் ஒன்று, சில குறிப்பிட்ட ஜூஸ்களை குடிப்பது. அது குறித்த ஒரு தகவலைத்தான் இங்கு பார்க்க போகிறோம்.
காலை 9 மணிக்குள் செய்ய வேண்டியது..
இந்தியர்களின் வீட்டு உணவில் வாரத்தில் இரண்டு முறைகள் ஆவது கண்டிப்பாக பீட்ரூட்டை எடுத்துக் கொள்வோம். இது உடலுக்கு ஊட்டச்சத்து தரும் காய்கறி என்பதை தாண்டி, சரும பராமரிப்பிற்கும் உதவும் ஒரு காய்கறியாக உள்ளது. இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் சரும மூலிகை கொடுக்குமாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து சரும கருமையும் நீக்கும் என கூறப்படுகிறது. இந்த பீட்ரூட்டுடன் வேறு சில உணவு பொருட்களை சேர்த்து பானமாக குடித்தால், கண்டிப்பாக சருமம் பளபளன்னு ஆகும் என சிலர் கூறுகின்றனர். இவற்றுடன் உங்கள் காலையை ஆரம்பியுங்கள். காலை வீட்டை விட்டு வெளியேறும் முன்பு, உங்கள் காலை உணவுகளை தொடங்கும் முன்பு 9 மணிக்குள்ளாக இதை குடித்தால் நல்லது.
பீட்ரூட் உடன் நெல்லிக்காய்..
இதனை உருவாக்க பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெல்லிக்காயை சிறிது சிறிதாக வெட்டி அதில் இஞ்சி சேர்த்து தண்ணீருடன் கலந்து அரைக்க வேண்டும். பீட்ரூட் எலுமிச்சை சாறு இரண்டையும் சேர்த்து அரைக்க வேண்டும். மிகவும் திக்காகவும் இல்லாமல் மிகவும் தண்ணியாகவும் இல்லாமல் பழச்சாறு பதத்தில் அதை அரைத்து குடிக்கலாம். இதில் இருக்கும் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும் என கூறப்படுகிறது.
பீட்ரூட் உடன் மாதுளை..
இந்த ஜூசை செய்வதற்கு, பீட்ரூட் உடன் மாதுளையை சேர்த்து குடிக்க வேண்டும். பீட்ரூட்டை கழுவி தோலுரித்து புதிதாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அதன் பின்னர் மாதுளம் பழத்தை உரித்து மிக்ஸியில் சேர்க்க வேண்டும். நன்றாக அரைத்த பின்பு வேண்டுமானால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம். இது உங்கள் முகத்திற்கு பிரகாசத்தையும் ஆரோக்கியமான பொலிவையும் தரும் என கூறப்படுகிறது.
பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஜுஸ்:
இது அனைவருக்கும் தெரிந்த, ABC ஜுஸ்தான். இவை அனைத்தையும் ஒன்றாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து வேண்டுமானால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, அரைத்து குடிக்கலாம். இது முக அழகுக்கு மட்டுமல்ல உடலில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் வெளியிடவும் உதவும் ஒரு பானமாகும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உங்கள் சரும பொலிவை அதிகரிக்குமாம்.
பீட்ரூட்டும் புளூ பெர்ரியும்..
சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் கலோஜன் குறைபாட்டை நீக்க பீட்ரூட்டையும் ப்ளூபெர்ரியையும் கலந்து குடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை இரண்டிலும் இருக்கும் சத்துக்கள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்குமாம். இது உங்கள் சருமத்திற்கு புழுவை கொடுப்பதோடு உங்கள் காலையை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பிரேக்-அப்புக்குப் பிறகு உடனே புதிய ரிலேஷன் – நல்லதா? உறவை தீர்மானிக்கும் விஷயங்கள்!
மேலும் படிக்க | சுவையான மசாலா டீ ரெடிமிக்ஸ்... வீட்டிலேயே தயாரிக்கலாம்... எளிய ரெசிபி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ