AI-ஆல் திருட முடியாத ஒரே ஒரு திறன்! ராெம்ப சிம்பிள்..கண்டிப்பா கத்துக்கோங்க..

Only Skill Cannot Be Replaced By AI : தற்போதைய காலக்கட்டத்தில் AI தொழில் நுட்பத்தால் பல பேருக்கு வேலை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், AI தொழில் நுட்பத்தால் திருட முடியாத ஒரு திறன் குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 14, 2025, 04:04 PM IST
  • AI-ஆல் மாறாத திறன்
  • இதனால் எந்த வேலையும் போகாது
  • கண்டிப்பா இந்த திறனை கத்துக்கோங்க..
AI-ஆல் திருட முடியாத ஒரே ஒரு திறன்! ராெம்ப சிம்பிள்..கண்டிப்பா கத்துக்கோங்க..

Only Skill Cannot Be Replaced By AI : செயற்கை நுண்ணறிவு, அதாவது Artificial Intelligence-ன் வளர்ச்சி, நம் அனைவரின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது, இப்போதைய வேலை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் இன்னும் பல வேலைகளை இழக்க வைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்கிற பயமும் அதிகரித்திருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

எந்த மாதிரியான கடினமான வேலையாக இருந்தாலும் எளிதாக செய்து விடும் AI தொழிநுட்பத்திற்கு ஒரு சிம்பிளான விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. அதுதான், மனிதனாக இருப்பது. AI அனைத்து வேலைகளை செய்து கொடுத்தாலும், அது ஒரு ரோபோ செய்து கொடுத்தது போல் இருக்கிறது எனும் குறை அனைவருக்கும் இருக்கிறது. AI-ஆல், புரிந்துணர்வு, உணர்வு புரிதல், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை செய்ய முடியாது. இது போன்ற விஷயங்கள்தான், மனிதர்களை ஒருவருடன் ஒருவர் தொடர்பு உடையதாக காண்பிக்கிறது. பிரச்சனையை தீர்ப்பதற்கு, ஒரு கூட்டத்தை வழி நடத்துவதற்கு, நம்பிக்கையை வளர்ப்பதற்கு போன்ற விஷயங்களுக்கு AI உதவாது. 

கற்றுக்கொள்ள வேண்டிய திறன்கள்:

Emotional Quotient (EQ): 

இதனை தமிழில் உணர்வு புலமை என்று கூறலாம். ஒருவர் என்ன உணருகிறார் என்பதையும், தான் என்ன உணருகிறோம் என்பதையும் புரிந்து கொள்வதே இந்த EQ ஆகும். 

இந்த திறன், உங்களை பற்றி நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள உதவுவதோடு, பிறரை பற்றி புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அதே போல, உணர்வுகளை எங்கெங்கு, எப்படி கையாள வேண்டும் என்பதையும் இது சொல்லிக்கொடுக்கிறது. பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், சமூகத்துடன் தொடர்பு கொள்ளுதல், நல்ல உறவுகளை வளர்த்தல் ஆகியவையும் இதில் அடங்கும். இது போன்ற திறன்களைதான், வேலைக்கு நேர்காணலுக்கு செல்லும் போதும் பிறர் எதிர்பார்ப்பர். 

இதை எப்படி வளர்ப்பது?

EQ-வை வளர்த்துக்கொள்ள, சில பயிற்சிகளை நாம் செய்ய வேண்டியது கட்டாயம். 

உணர்வுகளை புரிந்து கொள்வது:

நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு ஜர்னலில், இன்று உங்களது மனநிலை ஆனது எப்படி இருந்தது என்பதை எழுத வேண்டும். கோபம், சோகம், மகிழ்ச்சி என எதுவாக இருந்தாலும் எழுதலாம். உங்கள் உடல், அந்த உணர்ச்சிகளுக்கு எப்படி ரியாக்ட் செய்தது என்பதையும் எழுதலாம். 

சுய கட்டுப்பாடு:

எந்த ஒரு விஷயத்திற்கும் ரியாக்ட் செய்யும் முன்பு, கொஞ்சம் நிறுத்த வேண்டும்.

கடினமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்பு 5 நிமிடங்கள் பொறுமையாக இருந்து பதில் சொல்ல வேண்டும்.

உணர்ச்சி மிக்க நேரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுத்து விட கூடாது. 

புரிந்துணர்வு:

பிறரது உடல் மொழி, அசைவை கவனியுங்கள்.

பிறர் பேசும் போது அவர்களை இடை மறிக்காமல் பேசுங்கள்.

எப்போதும் அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டாலே போதுமானது. 

உறவுகளை பலப்படுத்துதல்:

உங்களை சுற்றி இருப்பவர்கள், நெருக்கமானவர்கள் உங்கள் மனதை நோகடித்தால் அதனை நீங்கள் அவர்களிடம் தெரிவிக்கலாம். ஆனால், அப்போது நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை பற்றி மட்டும்தான் பேச வேண்டும்.

மேலும் படிக்க | சருமம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்

மேலும் படிக்க | தலைமுடி அடர்த்தியாக இருக்க இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News