EPFO Big Update : பிஎப் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுப்பது எப்படி?

EPFO Update : பொது வருங்கால வைப்பு நிதியை (PF Amount) நீங்கள் இனி ஏடிஎம்மில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 9, 2025, 05:03 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி
  • இனி ஏடிஎம் மெஷினில் எடுக்கலாம்
  • மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
EPFO Big Update : பிஎப் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுப்பது எப்படி?

EPFO 3.0: EPFO தொடர்பாக ஒரு புதிய அப்டேட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO விரைவில் EPFO ​​3.0-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.  இதன் கீழ், EPFO உறுப்பினர்கள் பல சலுகைகளைப் பெற முடியும். மேலும் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அலைய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி பல சலுகைகளை வழங்கக்கூடிய EPFO ​​3.0 என்றால் என்ன என்று இங்கே பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

PF கணக்கு வங்கிக் கணக்கு போல செயல்படும்

மத்திய அமைச்சர் அளித்த தகவலின்படி, EPFO-வின் 3.0 வெர்சன் இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. இது ஒரு டிஜிட்டல் அமைப்பாக இருக்கும், இதன் கீழ் EPFO-வின் செயல்பாடும் ஒரு வங்கியைப் போல இருக்கும். இதன் உதவியுடன், PF பணத்தை எந்த தொந்தரவும் இல்லாமல் நேரடியாக ATM-ல் இருந்து எடுக்க முடியும். EPFO உறுப்பினர்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம் தங்கள் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். PF பணத்தை எடுக்க இப்போது மக்கள் EPF அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது முதலாளியிடம் செல்லவோ தேவையில்லை என்று மன்சுக் மண்டவியா கூறியுள்ளார். இது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும்.

சில நொடிகளில் PF பணத்தை எடுக்கலாம்

EPFO 3.0-ன் கீழ், PF பணம் இப்போது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், மேலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ATM-ல் இருந்து PF பணத்தை எடுக்கலாம். இதுவரை, PF பணத்தை எடுக்க படிவங்களை நிரப்ப வேண்டியிருந்தது. HR-ல் இருந்து கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. EPFO ​​3.0-ன் கீழ், உங்கள் வங்கிக் கணக்கைப் போலவே, உங்கள் PF கணக்கிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்க முடியும். அதாவது இப்போது நீங்கள் சில நொடிகளில் PF பணத்தை எடுக்க முடியும். இந்த பயன்பாட்டின் மூலம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் PF நிலை அல்லது இருப்பைச் சரிபார்க்கலாம். நிதி ரீதியான உங்கள் தேவைகளை தீர்த்துக் கொள்ளலாம். இந்த அப்டேட் தொழிலாளர்களுக்கு பல வழிகளில் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க |  SIP: மாதம் ரூ.9,000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்க எத்தனை ஆண்டு தொடர் முதலீடு தேவை?

மேலும் படிக்க | பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இத செஞ்சா போதும்.. உங்க வங்கி கணக்கில் ₹2500 செலுத்தப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News