EPFO news Latest : ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-ன் கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு விரைவில் மிகப்பெரிய ஒரு குட்நியூஸ் வரப்போகிறது. இதன் மூலம் பிஎப் பயனர்களுக்கு பெரிய வசதிகள் கிடைக்க உள்ளன. ஆம், இப்போது EPFO -லிருந்து பணத்தை திரும்பப் பெறும் முறையை அரசு எளிதாக்க உள்ளது. இதன் பயனாளர்கள் இப்போது UPI மூலம் உடனடியாக தங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும். இதற்காக, EPFO, NPCI உடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஏற்பாடு செய்யப்படுவதற்கான காரணம், பல நேரங்களில் ஊழியர்கள் PF தொகையை திரும்பப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு இந்த விதிமுறை மாற்றம் வர இருக்கிறது.
பிஎப் கோரிக்கை நிராகரிப்பு
2024 ஆம் ஆண்டில், EPFO இறுதி தீர்வு கோரிக்கைகள் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை 2023 ஆம் ஆண்டுக்கானது. இந்த அறிக்கையில், EPFO-ல் கோரப்பட்ட விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனவே, அரசு UPI மூலம் EPF பணத்தை திரும்பப் பெறுவதைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது செயல்முறையை பிஎப் பணத்தை திரும்ப பெறும் செயல்முறையை எளிதாக்கி, வேகமாக்கும்.
பணம் உடனடியாக கணக்கில் வரும்
இந்த புதிய முறையில், EPF உறுப்பினர்கள் GPay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI தளங்களைப் பயன்படுத்தி உடனடியாக பணத்தை திரும்பப் பெற முடியும். ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த வசதியைத் தொடங்க EPFO, NPCI உடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் மே அல்லது ஜூன் 2025க்குள் தொடங்கப்படலாம்.
புது அப்டேட்டுகள் என்ன?
யூனியன் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஆண்டு ஜனவரியில் கூறியதாவது, ATM மூலம் பணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட EPFO 3.0 முன்முயற்சி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்றார். EPFO 3.0 மூலம் பல வசதிகள் கிடைக்கும். UPI மூலம் EPF பணத்தை திரும்பப் பெறுவதன் பலன்கள் பல உள்ளன. இது பணத்திற்கு உடனடியான அணுகலை வழங்கும். தற்போது, EPF பணத்தை திரும்பப் பெற 23 நாட்கள் ஆகிறது, ஆனால் UPI மூலம் இது சில நிமிடங்களில் முடிக்கப்படும். இந்த புதிய செயல்முறை மேலும் வெளிப்படையானதாக இருக்கும். மேலும், பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும்.
அவசரத் தேவைகளுக்கு வசதி
இந்த வசதி குறிப்பாக அவசரமாக பணம் தேவைப்படும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மருத்துவ அவசரத்தில் பணம் தேவைப்பட்டால், உங்கள் EPF இலிருந்து உடனடியாக பணத்தை திரும்பப் பெற முடியும். இது உங்களை வேறு யாரிடமிருந்தும் கடன் வாங்க வேண்டியதில்லாமல் செய்யும். உங்கள் EPF இலிருந்து எளிதாக பணத்தை திரும்பப் பெறலாம். இந்த வசதி உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









