EPFO update News | PF இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது: நாடு முழுவதும் இருக்கும் 7.6 கோடி EPFO உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால், EPFO 2024-25 ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிப்ரவரி 2024-ல், EPF மீதான வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக ஓரளவு உயர்த்தப்பட்டது. இப்போது அந்த வட்டி விகிதம் தக்க வைக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில், உங்களின் EPFO கணக்கின் இருப்பைச் சரிபார்க்க விரும்பினால், வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
EPF பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி?
1. EPFO போர்டல் மூலம் சரிபார்க்கவும்
EPFO (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் PF இருப்பு பற்றிய தகவல்களைப் பெறலாம். அதற்கு நீங்கள் EPFO வலைத்தளத்திற்குச் செல்லவும். அங்கே ‘Our Services’ பகுதிக்குச் சென்று ‘For Employees’ என்பதைக் கிளிக் செய்யவும். Member Passbook விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். உள்நுழைந்த பிறகு, உங்கள் பாஸ்புக்கைப் பார்க்கலாம், அங்கு PF இருப்பு மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.
2. SMS மூலம் தகவலைப் பெறுங்கள்
உங்கள் UAN எண் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு பற்றிய தகவலை SMS மூலமாகவும் பெறலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘EPFOHO UAN’ என டைப் செய்யவும். அதனை 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். உங்கள் PF இருப்பு பற்றிய தகவல்களை SMS மூலம் பெறுவீர்கள்.
3. மிஸ்டு கால் மூலம் இருப்பைச் சரிபார்க்கவும்
மிஸ்டு கால் மூலம் PF இருப்பைச் சரிபார்க்கும் வசதியையும் EPFO வழங்கியுள்ளது. இதற்கு: உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF இருப்புத் தகவல் அனுப்பப்படும்.
4. UMANG செயலி மூலம் தகவல்
UMANG செயலி மூலமாகவும் உங்கள் PF இருப்புத் தகவலைச் சரிபார்க்கலாம். அதற்கு நீங்கள் பிளே ஸ்டோரில் இருந்து UMANG செயலியைப் பதிவிறக்கவும். ‘EPFO’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.‘Employee-Centric Services’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும். இங்கே நீங்கள் உங்கள் PF இருப்பு மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்கலாம்.
5. அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்
மேற்கூறிய எந்த வழிகளிலும் நீங்கள் தகவலைப் பெற முடியாவிட்டால், உங்கள் நிறுவனத்தின் ஹெச்ஆர் டிப்பார்ட்மென்டை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்கள் PF விவரங்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்க முடியும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை ;
UAN (யுனிவர்சல் கணக்கு எண்) ஆக்டிவில் இருப்பது மிகவும் முக்கியம். இந்த எண்ணை உங்கள் நிறுவனத்தின் HR துறையிடம் இருந்து பெறுவீர்கள். உங்கள் மொபைல் எண் EPFO-வில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் PF சரியான நேரத்தில் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை அறிய அவ்வப்போது பாஸ்புக்கைச் சரிபார்க்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









