இரட்டை கன்னம் என்பது கன்னத்தின் அடியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. இது முக அழகை கெடுக்கிறது என்பதை மறூக்க இயலாது. தினமும் சில பயிற்சிகளிய தவறாமல் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் தாடையை கூர்மையாக்கி, முக அழகை மேம்படுத்தலாம். இதன் காரணமாக உங்கள் முகம் உங்கள் வயதை விட இளமையாக தோற்றமளிக்கும். எனவே இழந்த நம்பிக்கையையும் முக மகிழ்ச்சியையும் மீண்டும் பெற, தினமும் செய்யக்கூடிய 3 முகப் பயிற்சிகளை அறிந்து கொள்ளலலாம்.
இரட்டை கன்னம் கொழுப்பைக் குறைப்பதும், உடல் பருமனைக் குறைப்பதும் ஒன்றல்ல. சில சமயங்களில் உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், முகத்தில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 முகப் பயிற்சிகள் உங்கள் இரட்டை கன்னம் நீங்க (Beauty Tips) உதவும்.
முகத்திற்கான பயிற்சி
இரட்டைக் கன்னத்தைக் குறைக்க முக பயிற்சி என்னும் முக யோகா பலன் கொடுக்கும். முக யோகா செய்ய பல வழிகள் உள்ளன. முக தசைகளுக்கு வேலை கொடுக்கும் வகையில், வாயை நாக்கை அசைத்து செய்யும் பயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். இதன் காரணமாக, முக இயக்கங்கள் அதிகரித்து, படிப்படியாக உங்களுக்கு விரும்பிய பலன் கிடைக்கும். இரட்டை கன்னத்தில் இருந்து விடுபடக்கூடிய சில பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
1. சின் லிஃப்ட் (Chin Lift)
சின் லிஃப்ட் அதாவது கன்ன சதைகளை இறுக்கும் பயிற்சி. இதனை செய்ய, முதலில் நேராக உட்கார்ந்து அல்லது நிற்பதன் மூலம் பயிற்சியை தொடங்கவும். பின்னர் உங்கள் தலையை பின்னால் சாய்த்து கூரையைப் பார்க்கவும். இப்போது முத்தமிடுவது போல் உதடுகளை மூடிக்கொண்டு 5-10 வினாடிகள் இந்த நிலையில் இருங்கள். மெதுவாக தலையை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள். சின் லிஃப்ட் இரட்டை கன்னம் மற்றும் கழுத்து கொழுப்பைக் குறைக்க உதவும். இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு இரண்டு முறை, 10-15 முறை செய்யவும்.
2. தாடைக்கான பயிற்சி (Jawline Release)
தாடைப் பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்க செய்யும் பயிற்சிக்கு, நிமிர்ந்து உட்கார்ந்து, எதையோ மெல்லுவது போல் உங்கள் தாடையை அசைப்பதன் மூலம் தொடங்கவும். இதைச் செய்யும்போது, உங்கள் வாயைத் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு, கீழ்ப் பற்களுக்குப் பின்னால் உங்கள் நாக்கை அழுத்தி வைத்துக் கொள்ளவும். 5 வினாடிகளுக்கு பின்ன, பின்னர் சாதாரண நிலைக்குத் திரும்பவும். இதன் மூலம் தாடை மற்றும் கன்னங்களின் தசைகள் இறுக்கமாகிறது. இந்தப் பயிற்சியை தினமும் 2-3 முறை என ஒவ்வொரு தடவையும் 10-12 முறை செய்யவும்.
3. பிஷ் பேஸ் (Fish Face)
மீன் முகத்தை உருவாக்க, முதலில் உங்கள் கன்னங்களை உள்நோக்கி இழுத்து, உங்கள் உதடுகளை மீன் போன்ற வடிவத்தில் குவித்துக் கொள்ளவும். இந்த நிலையில் 5-10 வினாடிகள் நீடித்து இருங்கள். அவ்வாறு செய்யும்போது புன்னகைக்க முயற்சிக்கவும். சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பவும். இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் கன்னங்கள் மற்றும் கன்னத்து எலும்புகளில் உள்ள கொழுப்பு குறைகிறது. இந்தப் பயிற்சியை நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை என, ஒவ்வொரு முறையும் 15-20 முறை செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பெண்களே.. உடம்பை ஃபிட்டாக வைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க!
மேலும் படிக்க | இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட் தொற்று? JN-1 Variant.... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ