Actor Ishaan Khatter Weight Loss Tips : பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர், இஷான் கட்டர். இவர், சமீபத்தில் வெளியான ஒரு தொடரில் சிக்ஸ் பேக் உடலோடு வந்து அனைவரையும் அசத்தினார். இதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், அதனால் தனக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
உடல் எடையை குறைத்த நடிகர்..!
இஷான் கட்டர், பாலிவுட்டின் பிரபலமான வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர். 29 வயதான இந்த நடிகர், சமீபத்தில் ஒரு தொடரில் நடித்தார். இதில், அவரது கதாப்பாத்திரத்திற்கு 20-21 வயதுள்ள தோற்றத்தில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. இதற்காக, இவர் உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்தார். இதனால், சுமார் 10 கிலோ வரை 2 மாதங்களில் குறைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாது, இவருக்கு தசையை வளர்க்க வேண்டும் என்கிற நிர்பந்தமும் எழுந்திருக்கிறது. சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தான் இதை எப்படி செய்தேன் என்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல்..
இஷான், இந்த உடல் எடை குறைப்பிற்கு முன்னரே தன் உடலை ஓரளவிற்கு வெயிட் போடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் இவரது உடல் எடையை குறைப்பது எளிதாக போயிருக்கிறது. இவர் நடனம் மற்றும் உடற்பயிற்சியில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்ததால், புது முயற்சிகளுக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் உடல் எடையை குறைத்தது எப்படி என்று கேட்ட போது “விடாமுயற்சி” என்று பதில் சொன்ன அவர், அது போர் அடிக்கும் பதிலாக இருந்தாலும் அதுதான் உண்மை என்று கூறினார்.
அட்வைஸ்:
இஷான், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அட்வைஸை கொடுக்கிறார். அதாவது, “உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், அதற்குறிய முயற்சிகளை முழு மனதுடன் எடுங்கள். அடுத்த நாள் சோர்வாக இருந்தால், அதனால் மனச்சோர்வு அடைந்து விடக்கூடாது. ஆனால், உங்களால் முடியவில்லை என்றால், அப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது” என்று கூறுகிறார்.
மேலும், “பலர் திடீரென்று ஒரு நாள் உற்சாகம் வந்தது போல ஜிம்மில் சேர்ந்து, அதிரடியாக வர்க்-அவுட் செய்வர். அதன் பிறகு உடலும் மனமும் சோர்வான பின்னர் ஜிம்மிற்கே செல்லாமல் இருப்பர். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு நபராக மாறிவிடாதீர்கள்” என்றும் அறிவுருத்துகிறார்.
ஹெல்தியான காலை உணவு:
இஷான், உடற்பயிற்சி செய்வதோடு சரியான டயட்டில் இருந்ததால் மட்டுமே சிக்ஸ் பேக்கை வளர்த்து உடல் எடையை குறைத்திருக்கிறார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அடிக்கடி சாப்பிடும் காலை உணவை இணையத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், பேன்கேக்ஸ், வெட்டிய ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ப்ளூபெர்ரி ஆகியவை இருந்தன. இவை, புரதம் நிறைந்ததாக இருப்பதோடு, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகளும் நிறைந்தவையாக இருக்கின்றன.
இதே போல, தொடர்ந்து ஹெல்தியாக சாப்பிட்டது, இவரது உடல் எடை குறைப்பிற்கு உதவியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | 124 கிலோவை குறைத்த 36 வயது நபர்... 220 Kg டூ 96 Kg - எடையை குறைக்க செய்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









