குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க..‘இதை’ சாப்பிடுங்க! பரிந்துரைக்கும் பிரபல நடிகை..

Masaba Gupta Healthy Foods To Eat After Birth : இன்ஸ்டா பிரபலம் ஒருவர், குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க 6 மாதத்திற்கு தான் சாப்பிட்ட உணவுகைளை போட்டோவாக வெளியிட்டு இருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 22, 2025, 04:16 PM IST
  • குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க..
  • சாப்பிட வேண்டிய சில ஹெல்தி உணவுகள்
  • என்னென்ன தெரியுமா?
குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க..‘இதை’ சாப்பிடுங்க! பரிந்துரைக்கும் பிரபல நடிகை..

Masaba Gupta Healthy Foods To Eat After Birth : மனிதராக பிறந்து விட்டாலே, உடல் எடை ஏறுவதும் இறங்குவதும் சகஜம்தான். அதிலும் பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல சமயங்களில் உடல் எடை அதிகமாக ஏறிவிடும். குறிப்பாக, குழந்தை பிறப்பிற்கு பிறகு பெண்களின் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். அப்படி, 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்ற பெண் ஒருவர், எடை ஏறாமல் இருக்க ஹெல்தியான உணவுகளை எடுத்துக்காெண்டு வருகிறார். அவை என்னென்ன தெரியுமா?

பிரபல நடிகை:

இந்தியாவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருகிறார், மசாபா குப்தா. இதுவரை பல பாலிவுட் பிரபலங்களின் ஆடைகளை டிசைன் செய்து கொடுத்திருக்கும் இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். 35 வயதாகும் மாசாபாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருக்கிறது. 

குழந்தை பிறப்பிற்கு பின், நாம் அனைவருமே ஹெல்தியாக சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால், கண்டிப்பாக வெயிட் மடமடவென ஏறி, உடலை பெருக்க செய்து விடும். இதனை அறிந்து கொண்ட மசாபா, வெயிட் ஏறாமல் இருக்க சில ஹெல்தியான உணவுகளை பகிர்ந்திருக்கிறார்.

ஹெல்தியான உணவுகள்:

இதில் முதல் உணவு, ஊற வைத்து ஓட்ஸ் மற்றும் பாதாம் பாலை வைத்து செய்யப்பட்ட உணவாகும். இதில் பெர்ரிக்களையும் அவர் சேர்த்திருக்கிறார்.

2வதாக அவர் சேர்த்திருக்கும் உணவு கிரில் செய்த பேசில் மீன் மற்றும் வறுக்கப்பட்ட காய்கறிகள்.

3வதாக கிரில் செய்த காய்கறிகளுடன் தேன் சேர்த்த மதிய உணவு. இதனுடன் ஏதேனும் விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Masaba (@masabagupta)

4வதாக முட்டை பொடிமாஸ், அதாவது ஸ்க்ராம்பில்ட் எக்ஸை சாப்பிட்டிருக்கிறார்.

5வதாக க்ரேக்க தயிர் மற்றும் பெர்ரி, மாம்பழம் சேர்த்த உணவு. இதனுடன் பூசணி விதைகள், சூர்யகாந்தி விதைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

6வதாக முட்டையை வேக வைத்து, அதனுடன் பீனட் பட்டர் சேர்த்த டோஸ்ட் சாப்பிடுகிறார்.

7வதாக பீட் ரூட் மற்றும் சிக்கன் ராப்.

8வதாக ஓட்ஸ் உடன் சேர்த்த காய வைத்த அத்திப்பழத்தை சேர்த்து சாப்பிடுகிறார். இவை, தன்னை ஹெல்தியாக பார்த்துக்கொள்ள உதவியதாக, மசாபா தனது கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, இது அவ்வப்போது ஏற்படும் ஸ்வீட் கிரேவிங்ஸையும் கட்டுப்படுத்த உதவுமாம்.

80/20 ரூல்:

சில மாதங்களுக்கு முன்பும், மசாபா ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், 80/20 ரூல் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதாவது, 80 சதவீதம் புரதம் மற்றும் ஹெல்தியான உணவுகளை சாப்பிடும் அவர், மீதி 20 சதவீதம் பேஸ்ட்ரி, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பீட்ஸா உள்ளிட்டவற்றை சாப்பிடுவாராம். இதனால், உடலில் எடை ஏறாமல் பார்த்துக்கொள்வதாேடு, சரியான டயட்டிலும் இருந்து ஆரோக்கியமாகவும் உடலை பார்த்துக்கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: மேற்கூறிய அனைத்தும், நடிகை மசாபா குப்தாவின் தனிப்பட்ட கருத்தாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. இதற்கு ஜீ மீடியா (ZEE MEDIA TAMIL) பொறுப்பேற்காது. 

மேலும் படிக்க | வெயிட் ஏறாமல் இருக்க தபு குடிக்கும் பானம்! காலை ஒருமுறை-இரவு ஒரு முறை குடிப்பாராம்..

மேலும் படிக்க | வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News