Sai Pallavi Diet Secrets For Weight Loss : தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகளுள் ஒருவர், சாய் பல்லவி. இவரை ஆண்கள்-பெண்கள் என இரு பாலினருக்கும் பிடிக்கும். சிலருக்கு இவரை பிடிக்கும் காரணம், இவரது இளகிய மனமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு இவர் எங்கு சென்றாலும் நேர்த்தியாக உடை உடுத்துவதாக இருக்கலாம். இப்படி எதுவாக இருப்பினும் சாய் பல்லவியை பலர் குயின் என்று வர்ணிப்பதுண்டு. இவரிடம் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், திரையுலகிற்கு வந்த காலம் முதல், இப்போது வரை தனது உடல் எடையை ஒரே மாதிரி மெயின்டெயின் செய்து வருகிறார். இதற்கு இவருக்கு உதவும் ஒரு விஷயம் குறித்து இங்கு பார்ப்போம்.
அந்த சீக்ரெட் பானம் என்னது?
சாய் பல்லவி, அவரது உடலை ஃபிட்டாகவும் எடை ஏறாமலும் பார்த்துக்கொள்ள உதவும் ஒரு பானம், இளநீர் என கூறப்படுகிறது. இதனை தனது தினசரி டயட்டில் சேர்த்துள்ள பல்லவி, தினமும் இந்த சுவையான இயற்கை பானத்தை 2 லிட்டர் குடித்து வருவதாக கூறப்படுகிறது.
இளநீரில் இருக்கும் நன்மைகள்:
இளநீர், அனைவருக்கும் கிடைக்கும் இயற்கையான எளிமையான பானமாகும். இது, நம் உடலில் எலக்ட்ரால் சத்து அதிகரிக்க உதவுவதோடு, இருதயம் மற்றும் சிறுநீரகத்தையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள உதவுகிறது. அது மட்டுமன்றி இது செரிமானத்திற்கும் உதவுகிறது. இதனால், சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது. சாய் பல்லவியின் இயற்கை அழகிற்கு, இந்த பானமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சாய் பல்லவிக்கு உதவும் பிற விஷயங்கள்:
நடிகை சாய்பல்லவி, இளநீர் குடிப்பதோடு இன்னும் சில டயட் மற்றும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகிறார்.
ஆரோக்கிய உணவுகள்:
நடிகை சாய் பல்லவி, பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுவாராம். அது மட்டுமன்றி, அந்த உணவுகள் ஆரோக்கிய காய்கறிகள் சேர்த்த உணவாக இருக்குமாம்.
சைவ உணவுகள்:
சாய் பல்லவி, தாவர உணவுகளை தனது டயட்டில் அதிகமாக சேர்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இவர் பெரும்பாலும் உட்கொள்வது சைவ உணவுகள்தானாம். இது, அவருக்கு புரத சத்துகளை தருவதோடு, அதிகமாக பசி எடுப்பதையும் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வைக்கிறது.
நீர்ச்சத்து:
சாய்பல்லவி, அதிகமான நீர்ச்சத்தை தனது உடலில் இருக்குமாறு பார்த்துக்கொள்வாராம். அடிக்கடி தண்ணீர் குடிப்பதோடு, பழங்களையும் அதே போல நீர்ச்சத்து இருப்பதாக எடுத்துக்கொள்கிறார்.
ஹெல்தியான ஸ்னாக்ஸ்:
எண்ணெயில் பொறித்த உணவுகளையும், சர்க்கரை சேர்த்த ஸ்னாக்ஸ்களையும் அறவே ஒதுக்கி விட்ட சாய் பல்லவி, அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என தோன்றினாலும், ஹெல்தியானவையாக மட்டுமே எடுத்துக்கொள்கிறாராம்.
கவனத்துடன் சாப்பிடுவது:
சாய் பல்லவி, எந்த அளவு சாப்பாட்டை சாப்பிட்டாலும், எதை சாப்பிட்டாலும், அதனை முழு மனதுடன் சாப்பிடுவாராம். இப்படி கவனத்துடன் சாப்பிடுவதால், அவர் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கிறார். இதனால், அவரது உடல் எடையும் பாலன்ஸாக இருக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









