35 கிலோ குறைத்த நடிகை சோனம் கபூர்! தினமும் இரவு 7 மணிக்கு குடிக்கும் சூப்..

Actress Sonam Kapoor Weight Loss Tips : பிரபல நடிகை சோனம் கபூர், சினிமாவிற்கு நடிக்க வரும் முன்பு, சுமார் 35 கிலோவை குறைத்திருக்கிறார். அவர், 40 வயதிலும் செய்யும் சில விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 12, 2025, 05:46 PM IST
  • 35 கிலோ குறைந்த சோனம் கபூர்
  • தினமும் செய்யும் விஷயம்
  • 40லும் செம ஃபிட்..எப்படி?
35 கிலோ குறைத்த நடிகை சோனம் கபூர்! தினமும் இரவு 7 மணிக்கு குடிக்கும் சூப்..

Actress Sonam Kapoor Weight Loss Tips : பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், சோனம் கபூர். அனில் கபூரின் மகளான இவர் 2007ல் திரையுலகிற்குள் நுழைந்தார். இவரை தமிழ் மக்கள் அம்பிகாபதி படம் மூலம் அறிந்து கொண்டனர். இந்த படத்தில் அவர் சோயா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக, பல பாலிவுட் நட்சத்திரங்கள் திரையுலகிற்கு வரும் முன்பு கொஞ்சம் சதை போட்டு கொழுக் மொழுக் என்று இருந்திருக்கின்றனர். ஆனால், திரையுலகிற்கு வர வேண்டும் என்பதற்காக அவர்கள் உடல் எடையை குறைப்பதுண்டு. அந்த வகையில், சோனம் கபூரும் திரையுலகிற்கு வரும் முன்பு சுமார் 35 கிலோவை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

PCOD பிரச்சனை:

சோனம் கபூருக்கு PCOD எனும் மாதவிடாய் பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் வழக்கமாக, உடல் எடை அதிகரித்து  காணப்படுவதுண்டு. இதனால், சோனம் கபூரும் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இவர், தனது 19 மற்றும் 20 வயதுகளில் சுமார் 86 கிலோ வரை இருந்ததாக கூறப்படுகிறது. 

எப்படி எடையை குறைத்தார்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், யாராலும் யாரையும் தடுக்க முடியாது இல்லையா? அதே போலத்தான் சோனம் கபூரின் கதையிலும் நடந்திருக்கிறது. இவர், படங்களில் நடிக்க வரும் முன்பு தன்னை தானே தயார் படுத்தியிருக்கிறார். அதற்காக இவர், கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்திருக்கிறார்.

எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, தனது உணவு பட்டியலில் இருந்து துரித உணவுகளை முதலில் நீக்கினார். அதன் பிறகு எண்ணெய் மற்றும் அதிக உப்பு சேர்த்த உணவுகளையும் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறார். சாக்லேட் சாப்பிட வேண்டும் போல் இருந்தால், கொழுப்பு இல்லாத டார்க் சாக்லேட்டை சாப்பிடுவாராம். 

பிரவுன் அரிசி, டோஃபு ஆகியவை இவரது டயட்டில் எப்போதும் இருக்கும் உணவுகள் ஆகும். இவை, மிகுந்த ஆரோக்கிய நன்மைகளும் உடையவை. அதே போல, கடுமையான பசியுடன் டயட்டில் இருப்பதும் இவருக்கு பிடிக்காதாம். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தனது உணவுகளை இவர் பிரித்து எடுத்துக்கொள்வாராம். 

வர்க் அவுட்:

உடல் எடையை குறைக்க, டயட்டுடன் சேர்ந்து, சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இவர், தனக்கென தனியாக ட்ரைனரை வைத்துக்கொண்டு உடர்பயிர்சி செய்திருக்கிறார். பெரும்பாலும் யோகா, கார்டியோ, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவை இவரது ஃபேவரட் உடற்பயிற்சிகளாக இருந்திருக்கின்றன. அது மட்டுமன்றி, இவருக்கு கதக் நடனம் ஆடவும் பிடிக்குமாம். அதை அவர் இப்போதும் தொடர்ந்து வருவதால் வெயிட் ஏறாமல் இருக்கிறதாம். 

40 வயதிலும் செய்யும் விஷயம்..

சோனம் கபூருக்கு சமீபத்தில் 40 வயதானது. அவர், இந்த வயதில் தனது உடல் கட்டுக்கோப்பாக இருக்க என்ன செய்கிறார் என்பது குறித்து ஒரு முறை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். 

6  மணிக்கு..

சோனம் தினமும் தனது காலையை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை நீருடன் ஆரம்பிக்கிறார். ஷார்ப்பாக காலை 6 மணிக்கு அவர் தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பாராம். இதில், வைட்டமின் C இருப்பதாக கூறப்படுகிறது.

சாக்லேட் காஃபி:

சோனம் ஓட்ஸ் பால் மற்றும் சில சாக்லேட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொலாஜன் கலந்த காபியை அருந்துகிறார்.இது முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்குமாம்.

டயட்:

காலை 10 மணிக்குள் பிரேக் ஃபாஸ்ட்டை முடித்து விடும் சோனம் கபூர், ஒரு முட்டை ஆம்லெட்டும் பிரட் டோஸ்டும் சாப்பிடுவாராம். அதன் பிறகு 2 மணிக்கும் முழு தானியங்கள் அடங்கிய உணவினை எடுத்துக்கொள்கிறார். மாலை ஸ்னாக்ஸ் ஆக, சிக்கன் டொஸ்ட் உள்ளிட்ட ஹெல்தியான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்.

இரவு 7 மணிக்கு ஒரு சூப் குடிப்பதுடன் தனது உணவு உட்கொள்ளுதலை நிறுத்திக்கொள்கிறார் சோனம் கபூர். இதனால்தான் இவரது உடல் 40 வயதிலும் கட்டுக்கோப்பாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: மேற்கூறிய விஷயங்கள் யாவும் சோனம் கபூரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். இவற்றை பின்பற்றும் முன்பு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பது நன்று. இந்த தகவல்கள் பொது தளங்களில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஜீ மீடியா (Zee Tamil News) இதற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 124 கிலோவை குறைத்த 36 வயது நபர்... 220 Kg டூ 96 Kg - எடையை குறைக்க செய்தது என்ன?

மேலும் படிக்க | 2 மாதங்களில் 10 கிலோ குறைத்த பிரபல நடிகர்! சிம்பிள் சீக்ரெட் சொல்கிறார் கேட்டுக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News