Actress Anita Raj Diet Secrets For Weight Loss : இயல்பான மனிதர்கள், திருமணத்திற்கு முன்பு ஒரு மாதிரியும் அதன் பின்பு வேறு மாதிரியும் மாறிவிடுவர். ஆனால், திரை பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டயாத்தில் இருக்கின்றனர். திரையுலகை விட்டு விலகிய பின்பும் கூட, அவர்கள் தங்கள் உடலை ஹெல்தியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் ரொம்ப ஒன்னும் டயட்டில் எல்லாம் இருப்பதில்லை. தங்களால் முடிந்த அளவிற்கு உடலை ஆக்டிவாக வைத்துக்கொண்டு, பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுகின்றனர். அந்த லிஸ்டில் இருக்கும் ஒரு பிரபல நடிகைதான், 60 வயதை தாண்டியும் இன்னும் ‘கின்’னென்று தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
62 வயதில் 61 நிமிட ப்ளாங்க்..
அந்த நடிகையின் பெயர், அனிதா ராஜ். இந்தி திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவர், 1981ஆம் ஆண்டில் ஆரம்பித்து இப்போது வரை, பல திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். உடலை கச்சிதமாக வைத்திருக்க விரும்பும் இவர், இந்த வயதிலும் 61 நிமிடங்கள் வரை பிளாங்க் செய்வாராம். இவர், தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
ஹெல்தியான டயட்:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டும் பத்தாது. அதனுடன் சேர்த்து நாம் சரியான டயட்டில் இருப்பதும் ரொம்பவே அவசியம் ஆகும். இதை கடைப்பிடிக்கும் அனிதா, தனது தினசரி உணவில் கார்ப்ஸ், புரத சத்துகள் மற்றும் நல்ல கொழுப்பு இருக்கும் உணவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அப்படி அவர் தான் வெள்ளை சாதத்தில் ஊற்றி சாப்பிட விரும்புவது எண்ணெய் ஊற்றாத சிக்கன் கிரேவி அல்லது முட்டை தொக்கு ஆகியவைதான் என கூறப்படுகிறது. இதை சாப்பிடுகையில் அவர், அதில் காய்கறி அதிகம் இருக்கும் வகையிலும், உடலுக்கு fat சேர்க்கும் பொருட்கள் குறைவாக இருக்கும் வகையிலும் பார்த்துக்கொள்கிறார்.
நேரத்திற்கு சாப்பிடுவது..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அல்லது ஃபிட்டாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள் கண்டிப்பாக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். இவர், தனக்கென்று சமைத்த உணவுகளை, காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சரியாக சாப்பிடுவாராம். இது, அவருக்கு சுய ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதாக கூறுகிறார்.
கார்டியோ உடற்பயிற்சிகள்:
அனிதா, சாப்பாட்டில் மட்டுமல்ல உடற்பயிற்சியிலும் ஸ்ட்ரிக்ட்-ஆக இருப்பவர். இவருக்கு ரன்னிங் செல்வது, வேகமாக நடப்பது என பல விஷயங்கள் பிடிக்குமாம். இது, அவரது மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து ஸ்டாமினாவையும் வளர்ப்பதாக நம்புகிறார். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த உடற்பயிற்சியை செய்யலாம். இதை செய்தால் உடலும் Strengthen ஆகும்.
வெயிட் லிஃப்டிங் செய்வது:
அனிதா, ஜிம் செல்லவும் தவறாதவர். தினசரி ஜிம்மிற்கு செல்லும் இவர், தன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு ஏற்றவாறு சில வெயிட் லிஃப்டிங் உடற்பயிற்சிகளையும் செய்கிறார். இதுவே இவரது உடலில் எக்ஸ்ட்ராவாக எந்த எடையும் ஏறாமல் வைத்துள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், பிற இணைய பக்கங்களில் இருந்த தகவல்களை வைத்து எழுதப்பட்டவை. இதை நாங்கள் உறுதி செய்யவில்லை. இதற்கு ஜீ மீடியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
மேலும் படிக்க | 48 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை ரம்பா..அழகின் பின்னணி இதுதானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









