ஜிம்மிற்கு செல்லாமல் 37 கிலோ எடை குறைந்த பெண்! ‘இதை’ மட்டும் செய்தாராம்..

Instagram Influencer Weight Loss Tips : ஒரு பெண், ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைத்திருக்கிறார். ஜிம்மிற்கு செல்லாமல் அவர் இதை செய்தது எப்படி? இதோ அது குறித்து பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2025, 05:27 PM IST
  • 37 கிலோ எடை குறைந்த பெண்
  • ஜிம்மிற்கே செல்லவில்லை
  • வேறு என்ன செய்தார்?
ஜிம்மிற்கு செல்லாமல் 37 கிலோ எடை குறைந்த பெண்! ‘இதை’ மட்டும் செய்தாராம்..

Instagram Influencer Weight Loss Tips : வயது வந்தவர்கள் முதல், வயதானவர்கள் வரை பலரும் தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்போம். ஆனால், பல சமயங்களில் அதை நம்மால் முடிக்க முடியாமல் போய் விடுகிறது. இதனால் பிடித்த ஆடை அணிய முடியாமலும், தன்னம்பிக்கை இழந்தும் அவதிப்படுகிறோம். இங்கு ஒரு பெண், ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே 37 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா? இதற்கான சீக்ரெட்டை அவரே சொல்கிறார்.

Add Zee News as a Preferred Source

37 கிலோ எடை குறைந்த பெண்..Weight Loss 

தனுஸ்ரீ என்ற பெண், ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே 37 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் தனது வாழ்க்கையில் தனக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை மட்டும் ஏற்படுத்தி இருக்கிறார். இன்ஸ்டா பிரபலமான இவர், அனைவருக்கும் (குறிப்பாக பெண்களுக்கு) உதவும் நடைமுறை டிப்ஸ்களை வழங்குகிறார். அவை என்னென்ன தெரியுமா?

தினமும் நடக்க வேண்டும்: Walking 

உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள், கண்டிப்பாக தினந்தோறும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தனுஸ்ரீ. இதுதான் அவரது முதல் பரிந்துரையாகவும் உள்ளது. எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள், தினமும் 30 நிமிடம் நடக்க வேண்டும் என கூறும் இவர், ஆரம்பத்தில் அது 15 நிமிடமாக இருக்க வேண்டும் எனவும் அதனை படிப்படியாக 30 நிமிடமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

புரதம் நிறைந்த உணவுகள்: Weight Loss Diet

உடல் எடையை குறைத்த பலரும் சரி, ஜிம் ட்ரைனர்களும் சரி புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இதைத்தான், தனுஸ்ரீயும் கூறுகிறார். உடல் எடை குறைப்பிற்கான டயட்டில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும் என்று கூறும் இவர், எதை சாப்பிட்டாலும் அதை மனதார், கவனத்துடன் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்.
தண்ணீர் குடிக்க வேண்டும்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். இதற்கு சில பானங்களும் உதவும். தனுஸ்ரீயை பொறுத்தவரை அவர் கொத்தமல்லி விதைகளை போட்ட தண்ணீரை அருந்துகிறார். ஆராயச்சி செய்து பார்த்ததில், இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடை குறைப்பிற்கு உதவும் என கூறப்படுகிறது. இதை குடிப்பதுடன் மட்டுமல்லாமல், கண்டிப்பாக அடிக்கடி தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொண்டால் அதிக பசி ஏற்படுவதையும், அதனால் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

வெயிட் ட்ரைனிங்:

தனுஸ்ரீ, வீட்ட்ல் இருந்தபடியே வெயிட் ட்ரைனிங்கும் செய்கிறார். டம்புல்ஸ் உள்ளிட்ட சில கருவிகளை வாங்கி வைத்திருக்கும் இவர், இவற்றை வைத்து உடற்பயிற்சியும் செய்கிறார். அப்படி இல்லை என்றால் ஒரு பை நிறைய புத்தகங்களை அடுக்கியும், அரிசி மூட்டைகளை தூக்கியும் கூட வெயிட் ட்ரைனிங் செய்யலாம் என்கிறார்.

சீக்கிரமாக சாப்பிடுவது:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இரவு 7 மணிக்குள் தங்களது டின்னரை முடித்துக்கொள்வது நல்லதாம். அதோடு மறுநாள் காலையில்தான் சாப்பிட வேண்டுமாம்.

வீட்டு உடற்பயிற்சிகள்:

உடல் எடையை குறைக்க பயன்படுபவற்றுள் முக்கியமான ஒன்று, வீட்டு உடற்பயிற்சிகள். இதனை தினசரி செய்ய வேண்டும் என்றும் தனுஸ்ரீ வலியுறுத்துகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்த குறிப்புகள் இன்ஸ்டா பிரபலம் தனுஸ்ரீயின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து பெறப்பட்டவை ஆகும். இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட சொந்த கருத்தாகும். இதற்கு ஜீ மீடியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இந்த வழிமுறைகளை பின்பற்றும் முன், மருத்துவர்களின் ஆலோசனைனை பெறுவது நல்லது. 

மேலும் படிக்க | 12 கிலோவை நினைத்த உடன் குறைத்த நடிகை... அவர் என்னென்ன சாப்பிட்டார் தெரியுமா?

மேலும் படிக்க | 1.5 வருடத்தில 45 கிலோ குறைந்த சாரா அலிகான்! தினமும் செய்த 2 விஷயங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News