பிரபல இடுகை செயலியான ட்விட்டர் கூற்றுப்படி Fashion Nova நிறுவனமானது ஆடைகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்... சமீப காலமாக நவநாகரீக ஆடைகள் என்ற பெயிரில் அவ்வப்போது புது வடிவ ஆடைகள் பலவற்றை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதற்கான விலையினை பார்த்தால் ‘ஒரு நிமிடம் தலை சுற்றிவிடும்’ போல் இருக்கும். காரணம் கைகுட்டை அளவு ஆடைக்கு 6000 ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை விலை நிர்ணயித்திருப்பர்.


அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புது வடிவ கால்சட்டையினை Fashion Nova மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. Havana Nights Cut-Out Pants என பெயரிடப்பட்டுள்ள இந்த கால் சட்டையானது $23 (இந்தியா ரூபாயின் மதிப்பில் ரூ-1600) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 2 வாரங்களில் ஆயிரக்கணக்கில் விற்பனையான இந்த கால்சட்டை ட்விட்டர் பயனர்களையும் விட்டு வைக்கவில்லை.


இந்த கால்சட்டை குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ள பயனர்கள், உலக அளவில் இந்த Nights Cut-Out Pant-களை ட்விட்டரிலும் ட்ரண்ட் ஆக்கியுள்ளனர். 



குறிப்பாக ஒரு நபர், "அன்பிற்குறிய Fashion Nova நிறுவனத்திற்கு, தங்களது அருவெறுப்பான விளம்பரத்தை நிறுத்தி வையுங்கள். நீங்கள் கால்சட்டை என பட்டியலிட்டுள்ள இந்த ஆடை உண்மையில் கால்சட்டையே கிடையாது" என குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு நபர்., "நிச்சையமாக நாங்கள் கால்சட்டையை வேண்டுகிறோம், ஆனால் வெட்டப்பட்ட  அல்லது தாராளமான கால் சட்டையினை விரும்பவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.



தான் வெளியிடும் ஆடைகளுக்கு Fashion Nova இதுபோன்ற விமர்சனங்களை பெறுவது இது முதல் முறை அல்ல, முன்னதாக இதேப்போன்ற வடிவமைப்புடன் வெளியான Wild Thang lace-up jeans-க்கும் இவ்வாறான எதிர்மறை கருத்துகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.