ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிக்கும் Happy Fridge திட்டம்....
உலகம் முழுவதும் பசியுடன் இரவில் தூங்கும் பலர் இன்றும் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 19 கோடி மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதும் பசியுடன் இரவில் தூங்கும் பலர் இன்றும் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 19 கோடி மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இந்தியாவின் பல நகரங்களில் ஏழை மக்களுக்காக 'Happy Fridge' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், சமீபத்தில் அவர்கள் வாரணாசியில் இதுபோன்ற 6 Happy Fridge நிலையத்தினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த நிலையத்தில் ஏழை மக்களுக்கு உணவு இலவசமாக கிடைக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, Feeding India என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் எந்த நபரும் பசியுடன் தூங்க கூடாது என்பதாகும்.
இதன் கீழ் வாரணாசியில் 6 'Happy Fridge' நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிலும், அப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் தங்கள் வீட்டில் மீதமுள்ள உணவை கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். பின்னர் பசியுடன் இருக்கும் எவரும் இந்த Happy Fridge-ல் வைக்கப்பட்டுள்ள உணவை எடுத்து உண்ணலாம்.
உறைபனிகள் எதுவும் இடையூறு நிகழாமல் இருக்கும் வகையில் இந்த உணவுகள் பதப்படுத்தப்படுகின்றன. மேலும் உணவை குறிப்பிட்ட நேரம் வரை பதப்படுத்தும் வகையில் நகரத்தின் அத்தகைய பகுதிகளில் அவை நிருவப்பட்டுள்ளன. குறித்த அந்த பகுதிகளில் ஏழை மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வாரணாசியின் பெருநகர தொழிலாளர்கள் மற்றும் வணிக வாரியத்தின் மக்கள், "இந்த Happy Fridge-றை கவனித்துக்கொள்வார்கள்" என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் Happy Fridge-ல் புதிய உணவு தான் வைக்கப்படுகிறதா என்பதையும் அவர்கள் உறுதி செய்து வருகின்றனர். இந்த Happy Fridge-ல் யாரேனும் உணவை வைத்திருக்க விரும்பினால், குறித்த வணிக வாரிய மக்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஒரு தன்னார்வ தொண்டு அதிகாரி, அக்ஷரா சிங், "அவர்களது மக்களும் அவ்வப்போது உணவு சாப்பிடுவது மதிப்புக்குரியது என்பதை சோதித்துக்கொண்டே இருப்பார்கள்" என்று கூறுகிறார். கடந்த மாதம் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் Feeding India 'Happy Fridge' நிறுவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.