Surya Grahanam 2025 Date And Time: இந்த ஆண்டின் அதாவது 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்த இரண்டு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாகும். மேலும் இந்த கிரகணம் ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியப்படும். இந்நிலையில், சூரிய கிரகணம் எந்த நேரத்தில் நிகழவுள்ளது, இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்பது குறித்த தகவலை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சூரிய கிரகணம்:
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியைச் சுற்றிக் கொண்டே, சூரியனையும் சுற்றி வருகிறது. இவ்வாறு, சூரியன் , பூமி மற்றும் நிலா ஆகிய மூன்றும் சுற்றி வருகையில் , இருப்பிடத்திற்கு ஏற்ப வகையில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும்.
சூரிய கிரகணம் எப்போது?
இந்த ஆண்டின் முதல் கிரகணம் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று மதியம் சரியாக 2.20 மணி தொடங்கியது மேலும் மாலை 6. 13 மணிவரை நீடிக்கும். மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும். மேலும் ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும். மேலும், வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் என்பதால், சிறந்த பார்வை அனுபவத்தை பெறலாம்.
Today’s partial solar eclipse is well underway. #solareclipse #solareclipse2025 @BBCNews @bbcweather @VirtualAstro pic.twitter.com/ZanEEmMMcE
— Mark Hume (@mark_hume) March 29, 2025
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
2. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
3. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:
1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
மேலும் படிக்க | ஷ்ஷ்..‘இந்த’ 7 விஷயத்தை எப்போதும் ரகசியமா வெச்சுக்கணும்! இல்லன்னா பிரச்சனை வரும்..
மேலும் படிக்க | தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா? அப்படி செய்தால் உடலுக்கு என்ன ஆகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









