ஆன்லைன் ஷாப்பிங்.... இனி ஆர்டர் கேன்சல் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுமா...
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக ஆகிவிட்டது. எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் நாம் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், பொருட்கள் வீட்டிற்கு வந்து சேரும். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஆர்டரை கேன்சல் செய்து பொருட்களை திரும்பி அனுப்பலாம். ஆனால் இப்போது Flipkart மற்றும் Myntra தளங்களில் ஷாப்பிங் செய்பவர்கள் இதற்காக கட்டணம் செலுத்த நேரிடலாம்.
Flipkart மற்றும் Myntra
நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் அடங்கும் Flipkart மற்றும் Myntra விரைவில் சில ஆர்டர்களை ரத்து செய்தால், அதற்கான கட்டணங்களை விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பிளிப்கார்ட் தனது கொள்கையை மாற்றப் போகிறது. தற்போது, வாடிக்கையாளர்கள் பொருளையும் வாங்கிய பிறகு தங்கள் ஆர்டரை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதற்காக அவர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், இனி அவர்கள் ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உண்டாகலாம். இந்த கட்டணம் ஆர்டர் மதிப்பைப் பொறுத்தது.
ஆர்டரை ரத்து செய்வதால் ஏற்படும் நஷ்டம்
ஆர்டரை ரத்து செய்யும் போது, கடைக்காரர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்கள் நஷ்டம் அடைவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பிளிப்கார்ட் நிறுவனம் கூறுகிறது. எனவே, இனி ஆர்டரை ரத்து செய்தால், கொஞ்சம் பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், ஆர்டர் செய்த குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்
ஆன்லைன் ஷாப்பிங்
பிளிப்கார்ட் இது குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் சில புதிய விதிகளை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த விதிகளால் மோசடி குறைவதுடன், கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படாம்ச்ல் தடுக்கலாம் என நிறுவனம் கூறுகிது. இந்த விதிகள் மிந்த்ரா இணையதளத்திற்கும் பொருந்தும். எனவே, நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், இந்த புதிய விதிகளை நீங்கள் அறிந்திருந்தால், சிக்கல்களை தவிர்க்கலாம்.
ஆர்டர் ரத்து கட்டணம்
ஆர்டர் செய்யப்பட்ட பொருளின் அளவு அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் ரத்து கட்டணம் மாறுபடலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இப்போதைக்கு, இந்த மாற்றங்கள் குறித்து பிளிப்கார்ட் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் நிறுவனம் விரைவில் கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | செல்போன் பயனர்கள் கவனத்திற்கு.... நாளை முதல் புதிய விதிகளை அமல்படுத்தும் TRAI...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ