தொப்பையை ஓட ஓட விரட்ட... இதோ 5 'சூப்பர்' யோகாசனங்கள்!

Reduce Body Fat With Yoga: உடல் எடையைக் குறைப்பதில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்றாடம் யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் பருமனைத் தவிர்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 10, 2026, 04:25 PM IST
  • எடை இழக்க யோகா பயிற்சி அவசியம்
  • தனுராசனம் தொப்பை கொழுப்பைக் கரைக்கும்
தொப்பையை ஓட ஓட விரட்ட... இதோ 5 'சூப்பர்' யோகாசனங்கள்!

Reduce Belly Fat With Yoga: யோகா உடலை உட்புறத்தில் இருந்து வெளிப்புறத்தில் இருந்தும் ஆரோக்கியமாக்க உதவுகிறது. அதேபோல் தொடர்ந்து யோகா செய்து வந்தால் முழு உடலையும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். யோகா உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உதவுகிறது, உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது, உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் இது உதவுகிறது, இதனுடன் மன அமைதியையும் அளிக்கும். எனவே நீங்கள் ஓவர் வெயிட்டால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், இந்த பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுப்பட யோகா செய்யலாம். யோகா தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடையைக் குறைக்கலாம், அதனுடன் பல உடல் நோய்களிலிருந்து விடுபடவும் உதவும். இந்நிலையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனங்களை (Yoga Asanas) கட்டாயம் செய்து வரவும். 

Add Zee News as a Preferred Source

எடை இழக்க யோகா பயிற்சி | Yoga For Weight Loss

தனுராசனம்: தனுராசனம் ஒரு யோகா ஆசனம், இது முழு உடலின் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், குறிப்பாக தொப்பை கொழுப்பைக் கரைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், கைகள் மற்றும் கால்களில் இருந்து கொழுப்பு அகற்றப்படுகிறது. தனுராசனம் செய்ய, முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்கள் இரண்டையும், முதுகை நோக்கி மடிக்க வேண்டும். பின்பு இரண்டு கைகளால் கணுக்கால்களை பிடிக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளை ஒன்றாக மேலே உயர்த்தி, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். 20-30 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு பழைய நிலைக்கு வர வேண்டும். இந்த ஆசனத்தை 3-4 தடவை செய்ய வேண்டும்.

உத்கடாசனம்: உத்கடாசனம் நாற்காலி போஸ் (Chair Pose) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பெயரைப் போலவே, இந்த யோகா ஆசனத்தைச் செய்யும்போது, ​​உடலை நாற்காலி வடிவில் வடிவமைக்க வேண்டும். இதற்கு முதலில் நாற்காலியில் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க கால்களை இடுப்பு தூரத்திற்கு வைக்க வேண்டும். உங்க கைகளை மடியில் வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு செங்கல்லை எடுத்து முன்னாடி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்க பாதத்தை செங்கல் மீது வையுங்கள். உங்க பாதங்கள் முழங்காலுக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்து உங்க கைகளை கூப்பி நமஸ்காரம் முத்திரையின் வைக்க வேண்டும். இப்பொழுது மூச்சை வெளியே விட்டு உங்க உடலை இடது பக்கமாக திருப்புங்கள். வலது முழங்கை ஆனது இடது முழங்காலுக்கு அருகில் வைக்க வேண்டும். உங்க உள்ளங்கைகள் மார்பின் முன் இருக்க வேண்டும். இதே நிலையில் 10-15 நிமிடங்கள் இருந்து மூச்சை உள்ளே மற்றும் வெளியே இழுத்து விடுங்கள். இதே மாதிரி மறுபக்கமும் செய்யுங்கள்.

புஜங்காசனம்: புஜங்காசனம் கோப்ரா போஸ் (Cobra Pose) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகாசனம் செய்ய, முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும். பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைய வேண்டும். விரைவான எடை இழப்புக்கு இந்த யோகாசனத்தை செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Face Fat : முகத்தின் அழகை கெடுக்கும் கொழுப்பு! குறைப்பது எப்படி? மருத்துவர் டிப்ஸ்..

மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமாய் குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News