)
Free Housing Scheme At PMAY Pradhan Mantri Awas Yojana: நம் அனைவருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். பலருக்கு இது வாழ்நாள் லட்சியமாகவும் இருக்கிறது. அதனுடன் இந்த கனவு சிலருக்கு கனவாகவே போய்விடுகிறது. ஆனால் அந்தக் கனவை நனவாக்க தற்போது மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது. அதன்படி தற்போது வீட்டு வாங்க அரசு தரப்பில் மானிய உதவி வழங்கப்படும்.
மத்திய மோடி அரசு தற்போது நடுத்தர மக்களுக்கு ஒரு சிறப்பான திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. வருமான வரியில் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதன்படி பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும், இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் EWS மற்றும் LIG பிரிவுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குகின்றன.
PMAY திட்டத்தின் கீழ், நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கட்சா வீடுகளில் வசிக்கும் மக்கள் பக்கா வீடுகளை வாங்க அரசாங்கம் உதவுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத்தின் கீழ், கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS) கிடைக்கிறது. இந்த மானியத்தைப் பெற அதிகபட்சமாக ரூ.2.67 லட்சம் வரை வரம்பு உள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2025: முக்கிய சிறப்பம்சங்கள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:
PM Awas Yojana Urban 2.0: https://pmaymis.gov.in/
PMAY rural: http://iay.nic.in/
அதுமட்டுமின்றி கடந்த 2024ஆம் ஆண்டில் PMAY-U 2.0 திட்டத்தை அங்கீகரித்த மத்திய மோடி அரசு, இந்தத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு மற்றும் ரூ. 2.30 லட்சம் கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
இதில், EWS குடும்பங்களுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் ஆகும்.
LIG குடும்பங்களுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையும்
MIG குடும்பங்களுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் EWS, LIG அல்லது MIG பிரிவின் கீழ் வர வேண்டும். ஆவாஸ் யோஜனா நகர்ப்புறத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டைப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் நகர்ப்புறத்தில் வசித்து வீடு வாங்க வேண்டும் என்று கனவு கண்டால் PMAY-U திட்டத்தின் வீட்டுக் கடன் மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ