UPSC Free books : பணம் செலவழிக்காமல் UPSC தேர்வுக்குத் தயாராவதற்கு இலவச புத்தகங்கள் மற்றும் படிப்பதற்கான மெட்டீரியல்களை எப்படிப் பெறுவது? என்பதை பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஆன்லைன் தளங்களிலிருந்து இலவச பயிற்சி மற்றும் புத்தகங்களைப் பெறுவதற்கான எளிய வழிகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் (CSE) வெற்றிபெற, போட்டியாளர்கள் NCERT புத்தகங்களைப் படிக்க வேண்டும். NCERT புத்தகங்கள் இந்த தேர்வுக்கு தயாராவதற்கான பேஸிக் தகவல்களை கொடுக்கின்றன.
யுபிஎஸ்சி தேர்வுக்கான ஒவ்வொரு பாடத்தின் அடிப்படைகளையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, UPSC வினாத்தாளில் NCERT புத்தகங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிறார்கள், ஆனால் பல மாணவர்களுக்கு விலையுயர்ந்த புத்தகங்களை வாங்குவது கடினம். இதுபோன்ற சூழ்நிலையில், இலவசமாக படிப்பதற்கான மெட்டீரியல்களை பெறுவது எப்படி என தெரிந்து கொள்வது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
NCERT அதிகாரப்பூர்வ வலைத்தளம்
UPSC தேர்வுக்குத் தயாராவதற்கு குறிப்பாக ஆரம்ப மற்றும் பிரதான தேர்வுக்கு NCERT புத்தகங்கள் மிகவும் முக்கியம். NCERT-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ncert.nic.in-லிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களின் புத்தகங்களையும் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் புத்தகங்களைப் படிப்பது UPSC தேர்வுக்கு அடித்தளத்தை அமைப்பது போன்றது.
e-Pathshala தளம்
epathshala.nic.in என்பது பல்வேறு பாடங்களின் NCERT புத்தகங்களை ஆன்லைனில் படித்து பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு அரசு தளமாகும். ஆடியோ-விஷுவல் கன்டென்டுகளும் இங்கே கிடைக்கிறது, இது உங்கள் புரிதலை மேலும் மேம்படுத்துகிறது.
இலவச ஆன்லைன் வலைதளங்கள்
Testbook, BYJU'S மற்றும் கான் அகாடமி போன்ற வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் UPSC தேர்வுக்கு தயாராவதற்கான இலவச மெட்டீரியல்கள் மற்றும் நோட்ஸ்களை, மாதிரித் தேர்வுகளை வழங்குகின்றன. அவற்றின் இலவச பதிப்பு நிறைய பயனுள்ள கன்டென்டுகளை வழங்குகிறது. மேலும், பல ஆன்லைன் பயிற்சி தளங்கள் UPSC தயாரிப்பிற்கான இலவச நேரடி வகுப்புகள், நோட்ஸ்கள் மற்றும் மாதிரி தேர்வுகளையும் வழங்குகின்றன.
அரசாங்க நூலகம்
உங்கள் நகரத்தின் அரசாங்க நூலகத்திற்கு செல்லவும். UPSC தொடர்பான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் டெல்லி பொது நூலகம், தேசிய நூலகம் மற்றும் மாநில மத்திய நூலகத்தில் கிடைக்கின்றன. நீங்கள் அந்த நூலகங்களில் உறுப்பினராக, நீங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும். பெரும்பாலான நூலகங்களில் ஆண்டு உறுப்பினர் கட்டணம் பெயரளவுக்கு மிக குறைந்தளவே வாங்குவதால், இந்த வாய்ப்புகளை உபயோகப்படுத்துங்கள்.
Kindle reading app-ஐப் பயன்படுத்தவும்
உங்கள் தொலைபேசியில் Kindle reading app-ஐ பதிவிறக்கம் செய்து "kindle-ல் இலவச புத்தகங்கள்" என்று தேடவும். UPSC பாடத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் பல கிளாசிக் மற்றும் பொது அறிவு தொடர்பான புத்தகங்களை இங்கே இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.
சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் குழுக்கள்
UPSC தேர்வர்களுக்கு உதவும் வகையில் உள்ள Facebook, Telegram மற்றும் WhatsApp-ல் பல குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களில் சேர்வதன் மூலம் நல்ல நோட்ஸ்கள், பயிற்சி கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை இலவசமாகப் பெறலாம்.
அரசாங்கத்தின் இலவச பயிற்சித் திட்டம்
பல மாநில அரசுகளும் நிறுவனங்களும் SC, ST மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு இலவச UPSC பயிற்சியை வழங்குகின்றன. இது குறித்த தகவல்களை உங்கள் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் அல்லது சமூக நலத் துறையிலிருந்து பெறுங்கள். இந்தத் திட்டங்களின் கீழ் இலவச படிப்புப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் நீங்கள் அதிக செலவு செய்யாமல் UPSCக்கு நன்கு தயாராகலாம்.
மேலும் படிக்க | ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









