)
Garuda Panchami 2025: கருட பஞ்டமி என்பது ஆடி அம்மாவைசையை அடுத்து வருகின்ற பஞ்சமி திதியாகும். இது காஷ்யபர்- வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாகும். இந்த நாளில் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதும், திருமாலை வணங்குவதும் வைணவர்கள் செய்கின்ற செயலாகும். இந்நாளில் விரதம் இருந்து பூசை செய்தால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் ஆதிசேசனுக்கும் பூசை செய்வது வழக்கமாகும். சாக்தத்தில் கவுரி அம்மனை நாகவடிவில் இன்று வழிபடுகின்றனர்.
இந்நிலையில் நாளை கருட பஞ்சமியும், நாக சதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருடனை வழிபாடு செய்வது சிறப்பாகும். அந்த வகையில் கருட பஞ்சமி (Garuda Panchami) தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். இந்த விரதத்தை மேற்கொண்டால் கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் அகலும் என்பது ஐதீகம்.
கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே கருடபஞ்சமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.
அதேபோல் நாளை நாக பஞ்சமி தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாக பஞ்சமி நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.
நாக பஞ்சமி அன்று அதிகாலையில் குளித்து நாக பஞ்சமி விரதம் தொடங்க வேண்டும். கோயிலில் உள்ள நாகர் சிலைக்கு மஞ்சள், பால் அபிஷேகம் செய்வதோடு, வீட்டிலேயே சிறிய வெள்ளியால் செய்யப்பட்ட அல்லது செம்பில் செய்த நாகருக்கு பூஜை செய்து வழிபடவும். இந்த பூஜை பெண்கள் செய்வதால் தன் கணவன், குழந்தைகளின் ஆரோக்கியம், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
பூஜை முடித்த பின்னர் கோயிலுகுக்கு சென்று வழிபட்டு, நாக தேவர்களை வணங்கி வீட்டில் பூஜித்து உங்கள் விரதத்தை முடிக்கலாம். இந்த பூஜை செய்ததால் செல்வத்தையும் செழிப்பையும் பெற முடியும், மேலும் கால சர்ப தோஷம் நீங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ