மஞ்சள் பற்களை ஒரேடியாக போக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்

Clean Yellow Teeth With Mustard Oil: பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆனால் இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 5, 2025, 08:25 PM IST
  • கடுகு எண்ணெயின் பண்புகள்
  • மஞ்சள் பற்களுக்கு கடுகு எண்ணெய்.
  • கடுகு எண்ணெயால் பற்களை சுத்தம் செய்யலாம்.
மஞ்சள் பற்களை ஒரேடியாக போக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்

Mustard Oil For Yellow Teeth: பற்கள் நம் முகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இவை நாம் சாபிடும் உணவை மெல்லுவதற்கும், முகத்தை அழகாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் சில சமயங்களில் பற்களில் மஞ்சள் நிறப் படிவு அல்லது அழுக்கு படியத் தொடங்குகிறது, இவை பார்ப்பதற்கு அழுக்காகத் தெரிவதுடன், ஆசிங்கமாகவும் தெரியும். இதனால் தன்னம்பிக்கை குறையலாம். இவற்றை சரியான நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, மக்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல விலையுயர்ந்த பேஸ்ட் மற்றும் ரசாயன அடிப்படையிலான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் இவற்றை பயன்படுத்துவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், பற்களை சுத்தம் செய்வதற்கு கடுகு எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

Add Zee News as a Preferred Source

கடுகு எண்ணெயின் பண்புகள்:
இந்திய வீடுகளில் குறிப்பாக வட மாநிலங்களில் பல வீட்டு வைத்தியங்களில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணெய் முடி, தோல் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கடுகு எண்ணெயில் இயற்கையான கிருமி நாசினி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவற்றில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல தாதுக்கள் நிறைந்திருக்கிறது, இந்த எண்ணெய் வாய் ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இதனுடன், இன்த எண்ணெயில் உள்ள கூறுகள் தொற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்றி வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது.

கடுகு எண்ணெயால் பற்களை சுத்தம் செய்யுங்கள்:
கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி பற்களை பல வழிகளில் சுத்தம் செய்யலாம். 

* கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பேஸ்ட் வடிவில் செய்துக் கொள்ளவும், அதை விரல் அல்லது மென்மையான பிரஷ் பயன்படுத்தி பற்களில் தடவவும். 2-3 நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். இப்போது வெதுவெதுப்பான நீரில் பற்களை கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்வது நன்மை பயக்கும். 

* இது தவிர, நீங்கள் மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெயை பேஸ்ட் செய்தும் பற்களில் பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை பற்கள் மற்றும் ஈறுகளில் தடவவும். 1 முதல் 2 நிமிடங்கள் வரை லேசாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் பற்களை கழுவவும். இதில் பயன்படுத்தப்படும் மஞ்சள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, மேலும் இவை ஈறுகளில் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. 

நன்மைகள் என்னென்ன?
கடுகு எண்ணெய் பற்களில் படிந்துள்ள தகடு மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது, அதனுடன் பற்களை வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும். இவை ஈறுகளுக்கு ஊட்டமளித்து அவற்றை வலிமையாக்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கடுகு எண்ணெய், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. மேலும், இது இயற்கையான முறை என்பதால், இவற்றில் எந்த பக்க விளைவுகளையும் இல்லை.

முக்கிய தகவல்:
உங்கள் பற்களை கடுகு எண்ணெயால் சுத்தம் செய்ய, மெதுவாக மசாஜ் செய்யவும். பற்களை மிகவும் அழுத்தி தேய்ப்பது ஈறுகளை சேதப்படுத்தும். பற்களில் அதிகப்படியான உணர்திறன் இருந்தால், முதலில் மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூட்டு வலி முதல் முதல் கொலஸ்ட்ரால் வரை... சுவையான பீட்ரூட் ராகி மில்க் ஷேக்... ரெசிபி இதோ

மேலும் படிக்க | உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்க... இந்த பானங்களை குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News