உலக பெற்றோர் தினம்: பொருளும் முக்கியத்துவமும்: அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்!!
தாய் – பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள். தந்தை – பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர். அவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாள்... அவர்களைப் பெருமை படுத்தும் இரு நாள். உலக பெற்றோர்கள் தினம்!! ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி உலகளாவிய பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய பெற்றோர் தினத்தின் பொருளையும் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
தாய் – பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள். தந்தை – பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர். அவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாள்... அவர்களைப் பெருமை படுத்தும் இரு நாள். உலக பெற்றோர்கள் தினம்!! ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி உலகளாவிய பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய பெற்றோர் தினத்தின் பொருளையும் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
ALSO READ | பெற்றோர்கள் தினம் 2020: வாழ்த்து கூற சில WhatsApp செய்திகள் இங்கே...
ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி உலக பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்கள் மற்றும் பெற்றோருக்கு நிகரான மற்ற முதியவர்களைப் பாராட்டி, அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்யும் எல்லாவற்றிற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது. இந்த நாள் பெற்றோரை போற்றும் ஒரு உலகளாவிய நாளாகும். இது பொது விடுமுறை நாளல்ல. இந்த நாளின் முக்கியத்துவத்தையும் இது தொடர்பான பிற செய்திகளையும் தொடர்ந்து பார்க்கலாம்.
உலக பெற்றோர் தினம்: பொருளும் முக்கியத்துவமும்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த பணிகளையும், இந்த உறவிற்காக அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பையும், அவர்களது வாழ்நாள் தியாகத்தையும் மதிக்க பெற்றோரின் உலகளாவிய தினம் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்கள் கடவுளின் பரிசாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையில் வேறு யாரும் அவர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது. குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முதன்மை பொறுப்பு குடும்பத்திற்கு உள்ளது என்பதையும் உலக பெற்றோர் தினம் அங்கீகரிக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு நல்ல குடும்பச் சூழலில், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் ஆகியவை நிறைந்த சூழலில் வளர வேண்டியது அவசியமாகும். குடும்பம் சார்ந்த அரசாங்கக் கொள்கைகள், பசி மற்றும் வறுமையை நீக்குவது, பகிரப்பட்ட பொருளாதார செழிப்பை ஊக்குவிப்பது, சமூக மேம்பாட்டை அடைவது போன்ற நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனினும், சமூக வாழ்க்கையின் மையம் குடும்பமே ஆகும்.
READ ALSO | மகளிருக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் -அன்புமணி!
வரலாறு
பெற்றோர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில், இது ஜூலை மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையிலும், தென் கொரியாவில் மே 8 ஆம் தேதியும் கொண்டாடப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிப்பதற்காக உலகளாவிய பெற்றோர் தினம் ஐ.நா பொதுச் சபையால் 1994 இல் அறிவிக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் பொறுப்பான பெற்றோரின் முக்கிய பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது. 1994 வாக்கில், சமூகம் முற்றிலும் சுயநலமாக மாறி இருந்தது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஐ.நா.வில், அதிபர் பில் கிளிண்டன், குடும்ப அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியாக பெற்றோர் தினக் கொண்டாட்டத்திற்கான ஒரு காங்கிரஸ் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இந்த யோசனையை யுனிஃபிகேஷன் சர்ச் ஆதரித்தது. பின்னர் செனேட்டர் ட்ரெண்ட் லாட் அமெரிக்க செனட்டில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார். மேலும், உள்ளூர், தேசிய மற்றும் மாநில மட்டங்களில் ஆண்டுதோறும் இந்த நாளை பெற்றோர் தினமாகக் கொண்டாட தேசிய பெற்றோர் தின கூட்டணி உருவாக்கப்பட்டது.
முழு உலகிலும், உலக பெற்றோர் தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரைப் பாராட்டி, அவர்களுக்கு அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் மரியாதை ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதாகும். நம் பெற்றோர் நமக்களித்த தியாகம், வளர்ப்பு, கவனிப்பு மற்றும் அசாதாரண ஆதரவு ஆகியவற்றிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மகிழ்விக்கும் நாளாகும் இது.
'தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..'
என்ற வார்த்தைகளை நம் காதுகளில் மீண்டும் நினைவூட்டும் நாளாகும் இது'!!