Gold Foods: தங்க பிரியாணி, தங்க முலாமிட்ட உணவுகளை சாப்பிடலாமா?
இந்திய உணவுக்கு தங்க மூலாம் பூசும் நவீன முறை! வடை தயாரிக்கப்படும் முறையையும், அது எப்படி தங்க முலாம் காகிதத்தால் அலங்கரிக்கப்படுகிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது
துபாய், உலகில் ஆடம்பரமான வாழ்வுக்காக அறியப்படும் நகரம். இங்கு பல நவீன விஷயங்கள் அறிமுகமாகும். அந்த வரிசையில் உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட சிற்றுண்டி துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும், அந்த சிற்றுண்டி இந்திய உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
தெரு உணவுகள் என்று வரும்போது, மும்பையின் வாடா பாவ் அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இந்தியர்களின் விருப்பமான சிற்றுண்டியை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். எனவே, துபாயில் சிற்றுண்டியை தங்க முலாம் பூசி ஆடம்பர உணவாக அறிமுகப்படுத்திவிட்டார்கள்.
இதற்கு முன்னதாக, தங்க பிரியாணி மற்றும் தங்க பர்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது தங்க முலாம் பூசப்பட்ட வட பாவுக்கும் பொன்னான காலம் வந்துவிட்டது.
உடனே, தங்க இட்லி, தங்க தோசை, தஙக பணியாரம் எல்லாம் எங்கே என்று கேட்கக்கூடாது!
வீட்டில் அன்புடன் தயாரித்து கொடுக்கும் உணவுக்கு தங்கத்தைவிட மதிப்பு அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் உங்களுக்கு ஏக்க பெருமூச்சு வராது.
ALSO READ | டொமினோவின் nuts and bolts பீட்சா சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டவரின் எதிர்வினை இது
துபாயின் கராமா (Karama) வில் அமைந்துள்ள O’Pao என்ற உணவகம் இந்திய உணவுகளை பரிமாறுவதற்கு பெயர் பெற்றது, இப்போது அது 'விலைமதிப்பற்ற' வடா பாவ் சிற்றுண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 99 திர்ஹம் (கிட்டத்தட்ட ரூ .2,000) விலையில் உள்ளது. இந்த தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ், அங்கேயே சாப்பிட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பேக் செய்து வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது.
மஸ்ரத் தாவூத் ட்விட்டரில் பகிர்ந்த வடா பாவ் வீடியோ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையதளவாசிகளை ஆச்சரியப்படும் இந்த வைரல் வீடியோவில் வட பாவ் மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ் ஒரு பக்கத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் புதினா எலுமிச்சம்பழத்துடன் வருகிறது.
இந்த வீடியோ வடை தயாரிக்கப்படும் முறையையும், அது எப்படி தங்க முலாம் காகிதத்தால் அலங்கரிக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
வடை, சீஸ் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பிரெஞ்சு ட்ரஃபிள் வெண்ணெய் ஆகியவற்றால் இந்த ஸ்பெஷல் வடா பாவ் செய்யப்பட்டுள்ளது. அங்கேயே தயாரிக்கப்பட்ட புதினா மயோனைசே டிப் வடா பாவுடன் கொடுக்கப்படுகிறது. பிரீமியம் தரமான இறக்குமதி செய்யப்பட்ட 22 காரட் தங்க இழைகளால் இந்த சிற்றுண்டி மூடப்பட்டுள்ளது.
வைரல் வீடியோவிற்கு பதிலிட்ட ஒருவர், "வட பாவ் இப்போது தங்கத் தரத்திற்கு வந்துவிட்டது" என்று எழுதினார். 22-கேரட் தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ் உங்களுக்கும் வேண்டுமா?
READ ALSO | திருமணத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு புதுமணத் தம்பதிகள் பில் அனுப்பிய வினோதம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR