)
Central Government Food Business Scheme | மத்திய அரசின் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (Prime Minister Micro Food Processing Enterprise Development Scheme) கீழ், விவசாயிகள் தங்கள் வணிகத்திற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம். நீங்கள் தொழில் செய்ய விருப்பம் இருந்து பணம் இல்லை என கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களும் தொழிலதிபராகலாம்.
அதாவது விவசாய சார்ந்த பணியில் இருக்கும் நீங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான். விவசாயம் சரியாக இல்லை என கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், மத்திய மாநில அரசுகள் வழங்கும் தொழில் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்ன தொழில் செய்கிறது என கேட்கிறீர்களா?. உங்களுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் போதும். மத்திய அரசு நிதியுதவி மற்றும் மானியத்துடன் தொழில் செய்யலாம். இதற்கு மத்திய அரசின் பிரதம மந்திரி நுண் உணவுத் தொழில் மேம்பாட்டுத் திட்டம் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் செய்யும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம்.
பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் பிற வேலையற்ற இளைஞர்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க இந்த திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால், நீங்கள் எந்தத் தொழிலை செய்ய நினைத்தாலும் அது விவசாயம் தொடர்பானதாக இருக்க வேண்டும்.
அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ், பருப்பு ஆலை, அரிசி ஆலை, மாவு ஆலை, கால்நடை மற்றும் கோழி தீவனத் தொழில், பேக்கரி தொழில், எண்ணெய் ஆலை, பால் உற்பத்தி, மூலிகை உற்பத்தி, காளான் உற்பத்தி, சோயாபீன் சார்ந்த பொருட்கள், மசாலாத் தொழில், கரும்பு சார்ந்த பொருட்கள், காய்கறி உற்பத்தி, பழ உற்பத்தி, உப்புத் தொழில் உள்ளிட்டசிறு அளவிலான பல தொழில்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்ளலாம். மானியமும் கிடைக்கும்.
உங்கள் தொழிலில் ரூ.35 லட்சம் முதலீடு செய்தால், இந்த அரசாங்கத் திட்டத்தின் கீழ், உங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 35 சதவீத மானியத்தைப் பெற, பயனாளி வங்கியில் இருந்து 55 சதவீதக் கடனைப் பெற வேண்டும். இது தவிர, அவர்களே 10 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இது தவிர, விவசாயி தொழிலைத் தொடங்க இடம் இருக்க வேண்டும். இடம் இல்லையென்றால், நீங்கள் அதை வாடகைக்கு எடுக்கலாம், இதற்காக குறைந்தது 15 ஆண்டுகளுக்கு குத்தகை இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அருகில் இருக்கும் அரசு அலுவலகத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை பெற்று விண்ணபிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ