ஓமர் கய்யாம் 971வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமர் கய்யாம் என அழைக்கப்படும் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி  ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். 


இவர் கவிஞர் மட்டுமல்ல மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியல் தொடர்பான துறையிலும் சிறந்த விளங்கியவர் ஆவார். வடகிழக்கு ஈரான் நாட்டில் உள்ள நிசாபூர் என்ற நகரில் உமர் மே 18, 1048 ஆம் ஆண்டு பிறந்தார். கய்யாமின் கவிதைகள் இன்றைக்கு உலகயளவில் பிரபலமாக விளங்குகின்றது. இவருடைய இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை மிக முக்கியமானதாகும்.


இவரது பாரசீகப் பாடல்களைக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நான்குவரிக் கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859-ல் வெளியிட்டார். இவர் இயற்றிய செய்யுட்களுக்கு, ‘ருபாய்த்’ என்று பெயர். ‘ருபாய்த்’ என்றால் நான்கடிச் செய்யுள் என்று பொருள்.


இந்நிலையில் இன்று 971வது பிறந்த நாளில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் கவிதைகளுக்கான திராட்சை, கணிதவியில், வானியியல் தொடர்பான அவருடயை திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.