Hair Care Tips: முடி வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் வழுக்கை தலையில் புதிய முடி வளர உதவும் மூன்று நாட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில், முடி உதிர்தல், இளநரை, இளம் வயதிலேயே வழுக்கை விழுதல் ஆகியவை பொதுவான பிரச்சனையாகிவிட்டன. மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், மாசுபாடு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
பலர் வழுக்கைத் தலையில் முடி வளரவே முடியாது என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், தலையின் தோல் இறந்துவிடவில்லை என்றால் மற்றும் துளைகள் (மயிர்க்கால்கள்) முழுமையாக மூடப்படாவிட்டால், இயற்கை வைத்தியம் மூலம் மீண்டும் முடியை வளரச் செய்ய முடியும். குறிப்பாக ஆரம்பகால வழுக்கைக்கு (Patchy Baldness), வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் வழுக்கை தலையில் புதிய முடி வளர உதவும் மூன்று நாட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
முடி மீண்டும் வளர உதவும் வெங்காய சாறு சிகிச்சை
வெங்காயத்தில் அதிக அளவு கந்தகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது துளைகளை ஆட்டிவேட் செய்து புதிய முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
பயன்படுத்தும் முறை
வெங்காயம் ஒன்றை எடுத்து தோலுரித்து அரைத்து அதன் சாற்றைப் பிரித்தெடுக்கவும். இந்த சாற்றை நேரடியாக உச்சந்தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு எந்த மூலிகை ஷாம்பூ கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு 3 முறை செய்யவும். சில வாரங்களில், முடி வேர்கள் வலுவடைந்து புதிய முடி தோன்றும்.
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் சிகிச்சை
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெயின் உதவியுடன் முடி வளர்ச்சியை தூண்டலாம். வெந்தயத்தில் புரதம், நிகோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வேர்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. தேங்காய் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது
பயன்படுத்தும் முறை
வெந்தயத்தை 2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், அதை அரைத்து பேஸ்ட் செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து லேசாக சூடாக்கவும். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் விடவும். பின்னர் லேசான ஷாம்பூவுடன் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜெல் சிகிச்சை
நெல்லிக்காய் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கற்றாழை உச்சந்தலையை குளிர்வித்து வறண்டு போகாமல் காக்கிறது. இந்த இரண்டின் கலவை முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கோண்டு 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் கழித்து கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றவும்.
வீட்டு வைத்தியம் உடனடியாக பலனைத் தராது. எனவே, பொறுமையாக இருங்கள். ஏனெனில் இயற்கை வைத்தியம் மெதுவாக வேலை செய்கிறது. மேலும், வீட்டு வைத்தியத்துடன், இரும்பு சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும். அதையும் மீறி. வழுக்கை அதிகமாகிவிட்டால், நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 2 ரூபாய் இருந்தால் போதும்.. வெள்ளை முடியை சட்டுன்னு கருப்பாக மாறும்
மேலும் படிக்க | விலையுயர்ந்த ஹேர் ஸ்பாவிற்கு பதிலாக, இந்த DIY ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ