Oily Hair Care Tips In Tamil: கோடை காலத்தில் மக்கள் தங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது போலவே, தங்களின் கூந்தலையும் பராமரிக்கின்றனர். பல நேரங்களில், நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், தலைமுடியைக் கழுவிய மறுநாளே முடி எண்ணெய் பிசுகூடன் இருக்கக்கூடும். குறிப்பாக இந்த எண்ணெய் பிசுக்கானது உச்சந்தலையில் அதிகம் இருக்கும். உச்சந்தலையில் அதிகப்படியான சீபம் (Sebum) எனும் எண்ணெய் உற்பத்தி இருக்கும்போது இது நிகழ்கிறது. அதிகப்படியான சீபம் (Sebum) காரணமாக, முடி மிகவும் எண்ணெய் பசையாக மாறத் தொடங்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், கோடைக்காலத்தில் உங்கள் தலைமுடியை தினமும் கழுவ முடியாது என்பதால், முடி (Hair Care Tips) மற்றும் உச்சந்தலையை முறையாகப் பராமரிப்பது முக்கியமாகும். இந்நிலையில் உங்கள் தலைமுடி விரைவாக எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா, இதுபோன்ற சூனிலையில் சில குறிப்புகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை பின்பற்றி வரவும்.
சரியான மற்றும் தரமான ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்
கோடைக்காலத்தில் சரியான ஷாம்பூவைப் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி எண்ணெய் பிசுக்குடன் இருக்காது. இந்த கோடை பருவத்தில், களிமண் சார்ந்த அல்லது வால்யூமைசிங் ஷாம்புகள் போன்ற எண்ணெய் பசையுள்ள ஷாம்புவை கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். இவை முடியில் உற்பத்தியாகும் அதிகப்படியான சீபமத்தை (Sebum) கட்டுப்படுத்துகின்றன.
இந்த கூறுகள் ஷாம்பூவில் இருக்கக்கூடாது:
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் சில பொருட்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அத்தகைய சூழிலையில் உங்கள் ஷாம்பில் இருக்கும் பொருட்களைப் கட்டாயம் படியுங்கள். இந்த கோடைப் பருவத்திற்கு எப்போதும் சல்பேட் இல்லாத மற்றும் பாராபென் இல்லாத ஷாம்புகளைத் தேர்ந்தெடுக்கவும். அத்தகைய ஷாம்புகள் மட்டுமே உங்கள் தலைமுடிக்கு நன்மை பயக்கும்.
கண்டிஷனரை உச்சதலையில் பயன்படுத்த வேண்டாம்:
நீங்கள் கண்டிஷனரைப் பயன்படுத்தினால், அதை உங்கள் முடியின் முனைகளில் மட்டும் தடவவும். உச்சந்தலையில் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, முடியை மேலும் எண்ணெய் பிசுக்குடன் மாற்றும்.
உலர் ஷாம்பு பயன்படுத்தவும்:
பலரின் தலைமுடியைக் கழுவிய மறுநாளே முடி எண்ணெய் பிசிக்குடன் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உலர்ந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். நீங்கள் உலர் ஷாம்பு வாங்குகிறீர்கள் என்றால், அதை நன்கு அறிந்து புரிந்து கொள்ளுங்கள். இது அனைவருக்கும் பொருந்தாது, எனவே முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தவும்.
ஹேர் பிரஷை சுத்தமாக வைத்திருங்கள்:
உங்கள் தலைமுடி அதிகமாக ண்ணெய் பிசிக்குடன் இருக்கக்கூடாது என்று விரும்பினால், உங்கள் தலைமுடி பிரஷை மற்றும் சீப்பை சுத்தமாக வைத்திருங்கள். அழுக்கு முடி பிரஷை பாக்டீரியா மற்றும் எண்ணெயை மீண்டும் முடிக்குள் கொண்டு வரும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது அதை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ