தந்தையர் தினம் 2020: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் தனது வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாக திகழ்கிறார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். 

Last Updated : Jun 21, 2020, 12:57 PM IST
தந்தையர் தினம் 2020: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் தனது வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாக திகழ்கிறார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். 

இந்த பூ உலகில் ஒவ்வொரு பிள்ளையின் மிகச்சிறந்த முதல் நண்பன் யாரென்றால் அது அவரது தந்தை தான் என கூறுவதில் ஆச்சர்யம் இல்லை… இவ்வளவு ஏன்! குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் முதல் கதாநாயகனே அவரது தந்தை தான் என்று கூறினால் அது மிகையாகாது.... ஏனென்றால் அப்பா …..என்ற சொல்லில் கோடிக்கணக்கான அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றது!. 

தனது பிள்ளையை கருவில் சுமப்பது தாயென்றால், அதே பிள்ளையை தோல்மீது சுமப்பது தந்தை. பெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் அனைத்தும் நமக்கு வெளியே தெரிவதில்லை. எவ்வித இடையூறும் இன்றி தன் பிள்ளைகளை வளர்க்க  வேண்டும் என மார்போடு அணைத்து தாய் அரவணைக்கிறாள்… ஆனால், தன் பிள்ளைகள் இந்த உலகத்தையே பார்க்க வேண்டும் என்ற ஆவலில்.. தன் பிள்ளையை தோல் மீது சுமக்கிறார் தந்தை… குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னதமானவர்கள் தான் தந்தையர்கள். 

READ | சிவப்பு நிற கண் கொரோனா தொற்றுக்கான முதல் அறிகுறியாகும்: ஆய்வு

இப்படிப்பட்ட உன்னதமான உறவான தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறன்று தந்தையர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவது தான் தந்தையின் சிறப்பு. உலகளாவிய ரீதியில் வெவ்வேறு தினங்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

தான் அனுபவித்த எந்தவொரு இன்னல்கலையும் தன் பிள்ளைகள் ஒருபோதும் படக்கூடாதென்பதில் எப்போதும் விழிப்பாய் இருப்பவர்கள் தான் தந்தை. இந்நாளில் எமது தந்தையர் எமக்காக செய்த தியாகங்களையும் அனுபவித்த கஷ்டங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உண்டு!.... ஒன்றின் பெறுமதியை அதனை இழந்த பின்னர் உணர்வதே மனித இயல்பு!.... எனவே, தந்தையின் பெருமையை அவரது வாழ்நாளில் உணர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் செயற்பட வேண்டும். இந்த நாளில் உலககம் முழுவதும் உன்னதமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து தந்தையருக்கும் ஜீ ஹிந்துஸ்தானின் இனிய தந்தையர் தின நல்வாழத்துக்கள். 

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு கூகிள் தந்தையர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது டூடுளில் பயனர்கள் தங்கள் தந்தையர்களுக்காக டிஜிட்டல் அட்டையை வடிவமைக்க அனுமதிக்கிறது. அதில், பென்சில்கள், காகித கட்-அவுட்கள், பூக்கள் மற்றும் அட்டைகள் மற்றும் உறைகள் கொண்ட கைவினைகளை குறிக்கிறது.

More Stories

Trending News