Indian Railway New Rules: நமது நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே தற்போது இயங்கி வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே கடந்த மே 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான பல விதிகளை மாற்றியுள்ளது. அந்த வகையில் நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால் இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். அதன்படி தற்போது தெற்கு ரயில்வே, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் முக்கிய விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் (Sleeper) பெட்டிகளை குறைத்து, அதற்குப் பதிலாக மூன்று படுக்கை (3AC) மற்றும் இரண்டு படுக்கை (2AC) AC பெட்டிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி வசதியாக ரயிலில் பயணம் செய்யலாம். அதிக வசதிகளை கொண்ட AC பெட்டிகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியாகியிட்டுள்ளது. அதன்படி அதில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரயில் தினசரி சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. அதுபோலவே, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
அந்தவகையில், முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, சாதாரண படுக்கை முன்பதிவு பெட்டிகள் 8, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயிலில் (வண்டி எண்: 12632) ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலும், சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலில் (12631)) ஆகஸ்ட் 4ஆம் தேதி முதலும் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று கடந்த வாரம் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அந்த அறிவிப்பில் மேலும், "இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 7ஆக குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஒரு மூன்றடுக்கு AC பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலமாக, மூன்றடுக்கு AC பெட்டிகள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆக அதிகரிக்க உள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் அதிவேக ரெயிலில் (12661) வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் புறப்படும் பொதிகை ரெயிலில் (12662) இதேபோல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில், ஆகஸ்ட் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு AC பெட்டிகள் உயர்த்தப்படும். இதற்கு பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தப்பட்ட... 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC
மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ