Health Benefits Of Eating Food From Banana Leaves : பழம்பெரும் தமிழ் மக்கள், தொன்று தொட்ட காலம் முதல் வீடுகளில் வாழை இலை போட்டு சாப்பிடுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதும் இது நடைமுறையில் இருப்பதுதான், ஆனால் அப்படி தினம் தோறும் வாழை இலையில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வீட்டிற்கு யாரேனும் விருந்தாளிகள் வந்திருந்தால் அல்லது, விசேஷ நேரங்களின் போது மட்டுமே வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்படுகிறது. அதில் கூட கம்ப்யூட்டர் இலை என்னும் பெயரில் வாழையிலை வடிவத்திலேயே பேப்பர் இலைகளும் வந்துவிட்டன. தென்னிந்தியாவின் பாரம்பரிய வழக்கமான வாழை இலையில் போட்டு சாப்பிடும் பழக்கம், நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி எடுத்து வந்து தருமாம். அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
சாப்பாட்டின் சுவையை அதிகரிக்கும்..
பல சமயங்களில் வாழை இலையில் உணவு அருந்துவதால் அந்த உணவு சுவையாக இருப்பதாக பலர் சொல்லி கேட்டிருப்போம். இது ஒரு வகையில் உண்மையும் கூட. நாம் சாப்பிடும் உணவு சாம்பார் ரசமாக இருந்தாலும் சரி, கறி-மீன் குழம்பாக இருந்தாலும் சரி, அதனை வாழை இலையில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவை இன்னும் பன்மடங்காக அதிகரிக்குமாம். இது, உங்கள் உணவில் ஃப்ளேவரை அதிகரிப்பதோடு, மனம் மற்றும் ஃப்ளேவரையும் அதிகரிக்கும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்:
வாழை இலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது, நாம் எடுத்துக்கொள்ளும் சாப்பாட்டில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாம் ஹெல்தியான உணவினை சாப்பிடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். இதனால், பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய்களும் வராமல் தடுக்கலாம்.
சுற்றுசூழலுக்கு நல்லது:
தற்போது நாம் வாழும் உலகு, மாசு நிறைந்ததாக மாறி விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், வாழும் மண் என அனைத்துமே நாம் வாழும் உலகுக்கு தீங்கு விளைவிப்பதாக மாறி வருகிறது. இதனால், அரசும்-சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பிளாஸ்டிக்குகளை அதிகம் உபயோகிக்க வேண்டாம் என கூறுகின்றனர். எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மாசடைந்த உலகை இன்னும் மாசு படுத்தாமல் இருக்க நம்மால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வாழை இலையை பயன்படுத்துவது மூலம் நாம் இதை செய்யலாம். வாழை இலை ப்ளாஸ்டிக் போல மாசு ஏற்படுத்தாததுடன், எளிமையாக மக்கும் தன்மையையும் கொண்டதாக இருக்கும்.
எளிதாக அப்புறப்படுத்த முடியும்:
ஒவ்வொரு வீட்டிலும், சமைப்பதற்கு மட்டும் அத்தனை பாத்திரங்கள் தேவைப்படுகிறது. சமைக்கும் பாத்திரம், கரண்டி உள்ளிட்ட பாத்திரங்களே பல இருக்கும். இந்த சமயத்தில் நாம் உணவை தட்டில் பரிமாறினால், அதையும் எக்ஸ்ட்ராவாக கழுவ வேண்டியதாக இருக்கும். எனவே, உங்கள் வேலை பலுவை குறைக்க கண்டிப்பாக இது உதவும்.
பார்க்கவும் அழகாக இருக்கும்..
முன்னொரு காலத்தில் ஃபேன்ஸியான தட்டில் சாப்பாட்டை கொட்டி சாப்பிடுவதைதான் அழகு என பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது பழங்கால முறையில்தான் உண்மையான அழகு அடங்கியிருக்கிறது என புரிந்து கொண்டனர். இதனால், பலர் பழைய ட்ரெண்டையே புதிப்பித்து புது ட்ரெண்டாக மாற்றி வருகின்றனர். எனவே, இப்படி வாழை இலையில் சாப்பிடுவதால் உங்களுக்கும் மனநிறைவாவதோடு, உங்கள் வயிரும் மனதும் நிரம்பிய உணர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய சுகருக்கு பதில் ‘இதை’ எடுத்துக்கோங்க..
மேலும் படிக்க | எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









