Home Loan Tips Tamil : இன்றைய காலத்தில், வீடு வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கிறது. அதற்காக பெரும்பாலானோர் வீட்டுக் கடன் (Home Loan) எடுக்கிறோம். ஆனால், வீட்டுக்கடன் இஎம்ஐ செலுத்துவதற்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தின் பெரும் பகுதி EMI-யாக செலவாகிறது. இதனால், பல சிரமங்களை சந்திக்கும் பலரும், வீட்டுக் கடனை விரைவாக தீர்க்க விரும்புகிறார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் வீட்டுக் கடனை சீக்கிரம் கட்டி முடிக்க எளிய 3 டிப்ஸ்களைப் பின்பற்றவும். 25 ஆண்டுக் கடனை 10 ஆண்டுகளிலேயே முடிக்கலாம்.
1. வீட்டுக் கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பது எப்படி?
உதாரணமாக நீங்கள் 50 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள் என்றால் தோராயமாக மாதம் 40,000 ரூபாய் மாதம் EMI செலுத்த வேண்டும். அதாவது, கடன் தொகை ₹50 லட்சம், செலுத்த வேண்டிய காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். இதற்கான வட்டி விகிதம் 8.5% எனில் மாத EMI ₹40,000 செலுத்துவீர்கள். இப்படி செலுத்தும்போது, முதல் சில ஆண்டுகளில், EMI-யின் பெரும்பகுதி வட்டியாக செல்கிறது. முதல் ஆண்டில் மொத்த ₹4.80 லட்சம் செலுத்துவீர்கள். இதில் அசல் கடன் 60,000 மட்டுமே குறையும். வட்டிக்கு செலுத்தியது மட்டும்₹4.20 லட்சமாக இருக்கும்.
இதை எப்படி சீக்கிரம் முடிப்பது?
2. ஒரு EXTRA EMI ஆண்டுக்கு ஒருமுறை செலுத்துங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ₹40,000 (ஒரு EMI) செலுத்தவும். இந்த கூடுதல் தொகை அசல் கடனைக் குறைக்கும். கடன் காலம் 25லிருந்து 20 ஆண்டுகளாகக் குறையும். EMI-ஐ ஆண்டுக்கு 7.5% அதிகரிக்கவும். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் EMI-ஐ 7.5% உயர்த்தவும். எடுத்துக்காட்டகா ₹40,000லிருந்து 43,000 ஆக அதிகரிக்கவும். கடன் காலம் 25ல் இருந்து 12 ஆண்டுகளாகக் குறையும். இதனால், மொத்த வட்டி குறையும்.
3. லோன் வெற்றி ரகசியம்
ஆண்டுக்கு ஒரு EXTRA EMI ₹40,000) + 7.5% உயர்த்தப்பட்ட EMI இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். 25 ஆண்டுக் கடன் 10 ஆண்டுகளில் முடிந்துவிடும். லட்சக்கணக்கான ரூபாய் வட்டியை சேமிக்கலாம்!
இந்த 3 டிப்ஸ்களைப் பின்பற்றினால்:
- கடனை 10 ஆண்டுகளில் முடிக்கலாம்!
- வட்டிச் செலவைக் குறைக்கலாம்!
- விரைவாக கடனிலிருந்து விடுபடலாம்!
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
கூடுதல் தொகையை செலுத்தும் போது "அசல் குறைப்பு" (Principal Reduction) என்று வங்கியிடம் குறிப்பிடவும். வட்டி விகிதம் மாறினால், EMI திட்டத்தை மீண்டும் கணக்கிடவும்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.5000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா
மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









