Home Remedies For Neck Pain : நன்றாக தூங்கிய பிறகு, காலையில் நிம்மாதியாக எழுந்திருப்போம் என படுக்கையில் இருந்து எழுந்தால், அப்போதுதான் வரும் கழுத்து வலி! இது ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது. ஒரு வேளை தவறான பொசிஷனில் படுத்து உறங்கியதால் இருக்கலாம். அல்லது, நீண்ட நேரம் குணிந்து போன் பார்த்ததால் இருக்கலாம். அப்படியில்லை என்றால், வேறு ஏதேனும் உடல் நலக்கோளாறு காரணமாக இருக்கலாம். எது எப்படியிருப்பினும் இந்த கழுத்து வலி வந்துவிட்டால் கண்டிப்பாக நம்மால் அந்த நாள் முழுவதும் சமாளிக்க முடியாது. ஒரு சிறு வேலையை செய்வதற்கு கூட முடியாமல் போய் விடும். இதைத்தாண்டி, கழுத்து வலியுடன் சேர்ந்து தலை வலியும் வரலாம். இதனை நாம் வீட்டிலிருந்த படியே சரி செய்யலாம். எப்படி தெரியுமா?
ஸ்ட்ரெட்சிங்:
காலையில் எழுந்து கொள்ளும்போதே உங்களுக்கு கழுத்து வலி ஆரம்பித்தால், பொறுமையாக ஸ்டிரச்சிங் செய்ய ஆரம்பிக்கலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தை குறைக்கவும் உதவும். தலையை நேராக நிமிர்த்தி, முதலில் வலது பக்கம் மெதுவாக திரும்ப வேண்டும். அதன் பின்பு, இடது புறம் திரும்ப வேண்டும். பின்னர், தலையை மேலும் கீழும் ஆட்ட வேண்டும். இந்த சிம்பிளான பயிற்சி உங்கள் கழுத்து வலியை நீக்க உதவும்.
சூடான அல்லது குளிரான கம்ப்ரெஸ்:
ஒத்தடம் கொடுப்பதற்கென்றே சில கோல்ட் அல்லது ஹாட் கம்ப்ரெசர்கள் இருக்கின்றன. உங்களது கழுத்தில் ஏதேனும் வலி அல்லது நெருடலான உணர்வு ஏற்பட்டால் இதனை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இதனை தினமும் 10 நிமிடங்கள் ஒத்தடமாக வைத்து, 3 முறை வைக்க வேண்டும். இது, கழுத்து வலியை போக்க உதவும்.
வெந்நீர்:
இதமாக சுடு தண்ணீரை காய வைத்து, அதில் கொஞ்சம் பாத்திங் சால்ட் போட்டு குளிக்கலாம். இது, உங்களின் கழுத்து வலியை நீக்கி, வீக்கத்தை குறைக்க உதவும். அதே போல ரத்த ஓட்டத்தையும் அதிகமாக்கி, வலியில் இருந்து நிவாரணம் தரும். கழுத்து வலியால் ஏற்படும் அசௌகரியத்தையும் இது நீக்க உதவும்.
மசாஜ் ஆயில்:
உங்கள் கழுத்தில், வலி இருக்கும் பகுதியில் தேங்காய் எண்ணெய் அல்லது உங்களின் சருமம் ஏற்றுக்கொள்ளும் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்யலாம். இது, உங்களது சதையை ரிலாக்ஸ் செய்ய உதவுவதோடு உங்கள் கழுத்து வலியையும் நீக்க உதவும். வந்த வீக்கத்தையும் நீக்க உதவும்.
ஆப்பிள் சைடர் வினீகர்:
ஆப்பிள் சைடர் வினீகர், கழுத்து ஸ்டிஃப்னஸ்ஸை நீக்க உதவும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் பலன்கள், அழற்சி எதிர்ப்புகளை நீக்க உதவும். இதை, ஒரு நாப்கினில் தோய்த்து உங்கள் கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் வைத்து தேய்க்கலாம். அப்படியே அதன் மீது ஒரு மணி நேரம் வரை வைக்க வேண்டும். இதனை, ஒரு நாளைக்கு 2 முறை செய்தால், கழுத்து தசைகளில் ஏற்பட்டிருக்கும் வலி நீங்கும். தசை வீக்கமும் குறையும் என கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் உள்ள பொதுவான தகவல்களை வைத்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









