Home Remedies To Treat Corona Symptoms: இந்த 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்தியாவில் மீண்டும் கோவிட்-19 எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மும்பை, சென்னை, அகமதாபாத் மற்றும் புனே போன்ற நகரங்களில் இந்த தொற்று நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தொற்றுகள் லேசானவை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அதிகரிப்பு புதிய துணை மாறுபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மட்டும் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதனுடன் மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர், எனினும் விழிப்புடன் இருப்பதும் பெரிய அளவிலான ஆபத்தை தடுக்க உதவும். எனவே இந்தக் கட்டுரையில், நாம் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஸில் வீட்டு வைத்தியங்களை பற்றி காணப் போகிறோம், இவை அனைத்தும் இயற்கை வைத்தியங்களாகும், மேலும் இவற்றை பின்பற்றினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.
வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும்:
உங்களுக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தால் தொண்டை வலி ஏற்படக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கொப்பளிப்பது தொண்டைக்கு நிவாரணம் அளித்து, தொற்றின் விளைவைக் குறைக்க உதவும்.
துளசி மற்றும் இஞ்சி தேநீர்:
துளசி, இஞ்சி, மிளகு மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருட்களையெல்லாம் ஒரு கப் வெந்நீரில் கொதிக்க வைத்து குடிப்பது உடலுக்குள் இருந்து சூட்டைத் தந்து, சளியை நீக்கி, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
நீராவி எடுக்கவும்:
மூக்கடைப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் என்பது கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இதுபோன்ற சூழ்நிலையில், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது ஓமம் சேர்த்து நீராவி எடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.
மஞ்சள் பால்:
மஞ்சளில் குர்குமின் என்ற ஒரு தனிமம் உள்ளது, இது வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. எனவே இரவு தூங்கும் முன் ஒரு கப் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிப்பது உடலுக்கு ரிலாக்ஸை தரும், அதனுடன் நல்ல தூக்கமும் வரும்.
எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீர்:
தொற்று ஏற்படும் போது வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பதால் தொண்டை சுத்தமாகும்.
ஏராளமான தண்ணீர் குடிக்கவும்:
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான நீர், இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் மூலிகை பானங்கள் குடிப்பது உடலை சுத்தப்படுத்த உதவும்.
உடலுக்கு போதுமான அளவு ஓய்வு:
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலுக்கு ஓய்வு தேவை. 8-9 மணிநேரம் தூங்கி, மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ‘மைசூர் பாக்’ என்று பெயர் வந்தது எப்படி? இந்த கதையை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









