வைகாசி 31ம் நாள்(2021 June,14): உங்களுக்கான ராசிபலன் எப்படி? அறிந்துக்கொள்ளுங்கள்!

எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2021, 10:34 PM IST
  • தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
  • கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்
  • ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
வைகாசி 31ம் நாள்(2021 June,14): உங்களுக்கான ராசிபலன் எப்படி? அறிந்துக்கொள்ளுங்கள்! title=

வைகாசி 31ம் நாள், திங்கட்கிழமை பலன்கள்: 2021, ஜூன் 14ம் தேதி 

மேஷம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம்

மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்துப்பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்
மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும்.
கடகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளவும். தந்திரமான செயல்களின் மூலம் மனதில் இருக்கக்கூடிய விருப்பங்களை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கன்னி

நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெற்று மனம் மகிழ்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

விருச்சகம்

செய்கின்ற காரியங்களின் தன்மைகளை அறிந்து செய்வது நம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மேற்கொள்ளும் சிறு தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தானியம் சார்ந்த வியாபாரத்தில் புதிய கொள்முதல்களில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் கூறும் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

மகரம்

வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

கும்பம்

கால் பாதங்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.
மீனம்
உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.

ALSO READ | இன்றைய பஞ்சாங்கம்: 2021 ஜூன் 14, வைகாசி 31ம் நாள், திங்கட்கிழமை

Trending News