How Did Alia Bhatt Lost Weight After Pregnancy : பாலிவுட்டின் பெரிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், ஆலியா பட். பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர், திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பு, கொஞ்சம் கொழுக் மொழுக் என்றிருந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை கடுமையாக குறைத்தார். அதன் பிறகு சிற்றிடையுடன் வலம் வந்து கொண்டிருந்த இவர், ரன்பீர் கபூரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பின்பு உடல் எடை கொஞ்சமாக கூடிய ஆலியா அதனை குறைத்தும் இருக்கிறார்.
டிரைனர் வெளியிட்ட வீடியோ…
நடிகை ஆலியா பட்டிற்க்கு சமீபத்தில், பிறந்தநாள் சென்றது. இதையொட்டி அவரது பிட்னஸ் ட்ரைனர் ஆலியா பட் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். இதில் அவர் 12 வாரங்களில் ஜிம்மில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்தார் இப்படி எடையை குறைத்தார் என்பது குறித்தான பதிவுகள் இடம் பெற்று இருக்கின்றன. இது, இணையவாசிகளிடையே தற்போது வைரலாகி வருகிறது.
செய்த உடற்பயிற்சிகள்: காலை உயர்த்தி தொங்கும் உடற்பயிற்சி: இந்த உடற்பயிற்சி இடுப்பு, கீழ் வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் இருக்கும் அதிக தசையை குறைக்க வழிவகுக்கிறது. மேலும், உடலை வலைவு நெலிவாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
ஜிம்னாஸ்டிக் ரிங் டிப்: இந்த உடற்பயிற்சி, மார்பு தோள்பட்டை மற்றும் ட்ரைசப் (கையின் பின்பகுதி) ஆகிய பகுதிகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. மேல் உடலை ட்ரைனிங் செய்ய இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.
புஷ் அப்: இந்த உடற்பயிற்சி மேல் உடல் மட்டும் முதுகு பகுதி ஆகியவற்றிற்கு ஸ்ட்ரென்த் கொடுக்கிறது. நீண்ட நேரம் ஆற்றலுடன் செயல்பட இந்த பயிற்சி உதவுகிறது.
புல் அப்: இந்த உடற்பயிற்சி உங்களின் மேல் உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி ஆகும். முதுகின் ஒரு பக்கங்கள், பைசெப்ஸ் ஆகியவற்றை இது வலு பெறச்செய்யும்.
ரன்னிங்: இந்த உடற்பயிற்சி சிலருக்கு கடினமானதாக இருக்கலாம். சிலருக்கு எளிதானதாக இருக்கலாம். நாம் என்ன சீரியல் ஓடுகிறோம் என்பதை வைத்து இது நமக்கு எளிமையாக இருக்கிறதா அல்லது கடினமாக இருக்கிறதா என்பதை தீர்மானிக்க முடியும். இதை ஆலியா பட்டும் செய்கிறார்.
பார்பெல் ஸ்குவாட்ஸ்: கீழ் உடலுக்கு வலு கொடுக்கும் உடற்பயிற்சிகளும் ஒன்று இது. இதனை செய்கையில் உங்களது மொத்த உடலும் ஆக்டிவேட் ஆகும். இதனால் உங்களின் வயிற்று தசை குறைந்து, உடலில் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.
டயட்: ஆலியா பட், குழந்தை பிறப்பிற்கு பிறகு தன் உடலை குறைக்க சரியான டயட்டையும் கடைப்பிடித்தார். தனது உணவு பட்டியலில் எப்போதும் புரதம் நிறைந்த உணவுகளை வைத்துக்கொள்ளும் இவர், ஸ்னாக்ஸ் சாப்பிட்டாலும் கூட, அவற்றை ஹெல்தியாகத்தான் சாப்பிடுவாராம்.
பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் ஆலியா, எடை ஏறாமல் இருக்க ஆயில் உணவுகளையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதே போல, தன் உடலுக்கு எந்த மாதிரியான உணவுகளும், உடற்பயிற்சிகளும் செட் ஆகும் என்று கேட்டு, அதன் பிறகு எடையை இவர் குறைக்க தாெடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | ஜிம் போகாமல் ‘75Kgs-ல் இருந்து 55Kgs’க்கு எடையைக் குறைத்த நடிகை அபர்ணதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









