Income tax notice guidelines : உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வராமல் இருக்க வேண்டும் என்றால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம் என்ற விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வங்கி கணக்கு வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது எவ்வளவு தொகை வங்கிக் கணக்கில் வைத்திருக்கலாம் என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா?. குறிப்பிட்ட தொகைக்கு மேல் சென்றால் உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்துக்கும் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இது குறித்த பொதுவான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்...
தினசரி பண பரிவர்த்தனை
சேமிப்பு கணக்கில் மொத்த டெபாசிட் அல்லது பணத்தை போட்டு எடுப்பது என ரூ. 10 லட்சத்தை தாண்டக்கூடாது. இந்த வரம்பை மீறினால் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும். அடிக்கடி எழுப்பப்படும் மற்றொரு கேள்வி ஒரு நாளில் பண பரிவர்த்தனைகளின் லிமிட் எவ்வளவு என்பது தான். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST இன் கீழ், ஒரு நபர் ஒரு பரிவர்த்தனையிலோ அல்லது ஜாயிண்ட் டிரான்ஸாக்சனிலோ ஒரே நாளில் ரூ. 2 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுக்க முடியாது. ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மொத்த ரொக்க வைப்புத்தொகை ரூ.10 லட்சத்தைத் தாண்டினால், வைப்புத்தொகைகள் பல கணக்குகளில் பரவியிருந்தாலும், வங்கிகள் வருமான வரித் துறையிடம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் வரம்பை மீறினால் என்ன நடக்கும்?
ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனையாகக் கருதப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 114B இன் கீழ், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அத்தகைய வைப்புத்தொகைகள் குறித்து வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் ஒரே நாளில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட ரொக்கத்தை டெபாசிட் செய்தால், உங்கள் பான் எண்ணை வழங்க வேண்டும். உங்களிடம் பான் இல்லையென்றால், மாற்றாக படிவம் 60/61 ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரி நோட்டீஸூக்கு எவ்வாறு பதிலளிப்பது
அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி நோட்டீஸை பெற்றால், நிதியின் மூல வருமானம் குறித்து போதுமான ஆதாரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இந்த ஆதாரத்தில் வங்கி அறிக்கைகள், முதலீட்டு பதிவுகள் அல்லது பரம்பரை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை இருக்கலாம். ஒருவேளை உங்கள் வருமானத்துக்கான அல்லது வைத்திருக்கும் பணத்துக்கான ஆதாரம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் வழிகாட்டுதலுக்காக ஒரு வரி ஆலோசகரை (ஆடிட்டர்) அணுகுவது நல்லது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- வருமான வரி சோதனையைத் தவிர்க்க, சேமிப்புக் கணக்கில் ரொக்க வைப்பு அல்லது திரும்பப் பெறுதல் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பிரிவு 269ST இன் கீழ் தினசரி ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது.
- ஒரு வருடத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
- ஒரு நாளில் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட் செய்தால், பான் கார்டு அவசியம்.
- வருமான வரி நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க, நிதியின் மூலத்தை விளக்க போதுமான ஆவணங்களை வழங்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









