வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்... வீட்டில் இருந்த படியே எளிதாக விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு வாக்களிக்க மட்டுமல்லாமல், மிக முக்கிய அடையாள ஆவணமாகவும் உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், பெற, வீட்டிலேயே இருந்தபடியே சில நிமிடங்களில் விண்ணப்பித்து , புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2025, 03:51 PM IST
  • வாக்காளர் அடையாள அட்டையின் முக்கியத்துவம்.
  • வாக்காளர் அட்டையைப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது.
  • சில நிமிடங்களில் விண்ணப்பித்து , புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்... வீட்டில் இருந்த படியே எளிதாக விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு வாக்களிக்க மட்டுமல்லாமல், மிக முக்கிய அடையாள ஆவணமாகவும் உள்ளது. வங்கி, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் பெறுவதற்கும், கல்லூரி சேர்க்கைக்கும் கூட இது பயனுள்ளதாக இருக்கும். எனவே, உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையென்றால், நீங்கள் உடனே அதற்கு விண்ணப்பிப்பது நல்லது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், பெற, வீட்டிலேயே இருந்தபடியே சில நிமிடங்களில் விண்ணப்பித்து , புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source

வாக்காளர் அட்டையைப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் மொபைல் அல்லது மடிக்கணினி மூலம் செய்ய முடியும். வாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எளிதான வழி. புதிய வாக்காளர் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம். 

வாக்காளர் அட்டைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சில முக்கியமான நிபந்தனைகள் உள்ளன. அதாவது விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவருக்கு இந்தியாவில் நிரந்தர முகவரி இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை பெற குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்

வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, ​​சில முக்கியமான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இந்த ஆவணங்கள் JPG, JPEG அல்லது PDF வடிவத்தில் இருக்க வேண்டும்.

1. உங்களது சமீபத்திய 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

2. முகவரி சான்று (மின்சார பில், எரிவாயு பில், தண்ணீர் பில், தொலைபேசி பில், வங்கி பாஸ்புக், வாடகை ஒப்பந்தம் போன்றவை)

3. ஐடி சான்று (ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை)
வயது சான்று (பிறப்புச் சான்றிதழ், 10வது மதிப்பெண் பட்டியல் போன்றவை)

4. தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு சரியான வடிவத்தில் பதிவேற்றவும்

வாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

1. முதலில் https://voters.eci.gov.in/ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

2. வாக்காளர்கள் (Electors) பிரிவுக்குச் செல்லவும்

3. உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால், மொபைல் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு உள்நுழையவும்
இல்லையெனில், பதிவுசெய்து புதிய கணக்கை உருவாக்கி (Sign-Up) உள்நுழையவும்

4. இப்போது Fill Form 6  என்பதைக் கிளிக் செய்யவும்

5 உங்கள் மாநிலம், மாவட்டம், சட்டமன்றம் மற்றும் பெயர், தந்தை/கணவர்/மனைவியின் பெயர், ஆதார் எண், முகவரி போன்ற பிற விவரங்களை உள்ளிடவும்

6. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு  Preview & Submit என்பதை கிளிக் செய்யவும்

7 சமர்ப்பிக்கும் போது, ​​திரையில் Yes என்பதைக் கிளிக் செய்யவும்

8. படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பு எண் கிடைக்கும். இந்த எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க முடியும். நீங்கள் விரும்பினால், Download Acknowledgement கிளிக் செய்வதன் மூலம் அதற்கான ஒப்புகை சீட்டையும் சேமிக்கலாம்.

வாக்காளர் அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும்?

உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, அது வெவ்வேறு நிலைகளில் சரிபார்க்கப்படும். தகவல் எல்லாம் சரியாகக் கண்டறியப்பட்டால், முதலில் மின்-வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் உருவாக்கப்படும். பின்னர் சில நாட்களில் வாக்காளர் அட்டை உங்கள் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

வாக்காளர் அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது (How To Download Voter ID Card )

நீங்கள் ஏற்கனவே ஒரு வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து அதன் நிலையைக் கண்காணிக்க விரும்பினால் அல்லது டிஜிட்டல் வாக்காளர் அட்டையைப் பதிவிறக்க விரும்பினால், e-Voter Card விருப்பத்தைத் தேர்வு செய்யவும். இதற்காக https://voters.eci.gov.in/ க்குச் சென்று உள்நுழைந்து பதிவிறக்கவும்.

மேலும் படிக்க | விரைவில் வருகிறது E-Aadhaar செயலி.. இனி திருத்தங்கள் செய்வது மிக எளிது

மேலும் படிக்க | பான் கார்டு தொலைந்து விட்டதா... டூப்ளிகேட் பான் கார்டு பெறும் எளிமையான வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News