)
Summer Skin Care Tips In Tamil: தற்போது அனல் காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள, மக்கள் ஏசி, மின்விசிறி போன்ற இயந்திரத்தில் இருந்து பிரிந்து இருக்க விரும்புவதில்லை, ஆனால் தேவைப்படும்போது வெளியே செல்ல வேண்டியிருக்கிறது, இதுவே தற்போதைய மிக்கபேரிய பிரச்சனை ஆகும்.
சில நேரங்களில் கடுமையான வெப்பத்திலும், சில நேரங்களில் குளிர்ந்த இடத்திலும் இருப்பதால், தோல் தொற்று ஏற்படுகிறது. சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, சந்தையில் கிடைக்கும் பொருட்களை வாங்குவதற்கு முன் கவனமாக இருப்பது முக்கியம் ஆகும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம். எனவே இந்த வானிலைக்கு ஏற்ப சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள என்பதை அறிந்து கொள்வோம்-
வறட்சி மற்றும் எரிச்சல்
வெப்பமான சூழலில் நீண்ட நேரம் இருப்பது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தின் சமநிலையை சீர்குலைக்கும். மேலும், உடலில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணத்தால், தோல் வறண்டு போகும். எனவே, வெயிலில் வெளியே செல்லும்போது எப்போதும் காட்டன் துணியால் முகத்தை மூடிக் கொள்ளவும்.
அரிப்பு அல்லது ரிங்வோர்ம்
உடலில் அரிப்பு பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் ஈரப்பதமான வானிலையில் இது அதிகமாக ஏற்படக் கூடலாம். இது அதிகமாக அதிகரித்தால், அது ரிங்வோர்மாகவும் மாறக்கூடும். ரிங்வோர்மைத் தடுக்க பல வழிகள் உள்ளன - வேப்ப இலைகள் அல்லது முல்தானி மிட்டியின் பேஸ்ட், குளிர்ந்த நீர் ஃபோமென்டேஷன் போன்றவை பயன்படுத்தலாம்.
முகப்பரு பிரச்சனை
உங்கள் தோலில் வியர்வை பாக்டீரியா மற்றும் எண்ணெய்களுடன் கலக்கும்போது, அது வியர்வை வெளியேறும் துளைகளை மூடுகிறது. இது முகப்பரு அபாயத்தை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, சுத்தமான துண்டு அல்லது துணியால் வியர்வையைத் துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வாமை அல்லது அதீத வெயில்
சில நேரங்களில் வெயில் மிகவும் வலுவாக இருப்பதால் முகத்தில் எரிச்சல் ஏற்படத் தொடங்கும். மேலும் கைகள் மற்றும் கால்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது. முகத்தில் வெயில் தீக்காயம் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க, முழு உடலையும் மூடிக்கொண்டு வெளியே செல்லுங்கள். நல்ல SPF உள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
வெப்பத் தடிப்புகள் அல்லது காமோரி
கோடைகாலத்தில் காமோரி பொதுவானது. வியர்வை காரணமாக ஏற்படும் அரிப்பு காரணமாக, காமோரி உடலில் தோன்றும் மற்றும் சிவப்பு பருக்கள் தோன்றும். சில நேரங்களில் இந்த பருக்கள் வெடித்து அவற்றிலிருந்து தண்ணீரும் வெளியேறக்கூடும். இவற்றைத் தவிர்க்க, குளிர்ச்சி பவுடர்களைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்துக் கொள்ளவும்.
ஃபோலிகுலிடிஸ் ஆபத்து
உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு முடியிலும் ஃபோலிகல் எனப்படும் துளையிலிருந்து வெளியேறுகிறது. தோல் வறண்டு இருக்கும்போது ஃபோலிகல் தொற்று ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மயிர்க்கால்கள் பருக்கள் போல இருக்கும், ஆனால் அவை கொஞ்சம் குறைவாக அரிக்கும். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சி அல்லது ஜிம் போன்றவற்றிற்குப் பிறகு இறுக்கமான வியர்வையுடன் கூடிய ஆடைகளை அகற்ற வேண்டும்.
சரும பராமரிப்புக்கு இணைய ஊடகங்களின் ஆலோசனையைப் பெற வேண்டாம்
சருமம் எண்ணெய் பசையாக இருந்தால், நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தக்கூடாது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதால் முகப்பரு மற்றும் பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வெயிலில் இருந்து பாதுகாக்க ரசாயன சன்ஸ்கிரீனுக்குப் பதிலாக இயற்கையான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. ஸ்டீராய்டு கிரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இணைய ஊடகங்களில் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதும் தோல் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ