Health Insurance: இன்றைய காலகட்டத்தில், மருத்துவமனைக்குள் கால் பதித்தாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல அல்லது மருத்துவ காப்பீடு மிகவும் அவசியமாகிறது. பலரும், கொரோனாவுக்குப் பிறகு, மருத்துவ காப்பீட்டிற்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.
மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது . முதல் முறையாக மருத்துவ காப்பீடு எடுக்கிறீர்கள் என்றால், சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த உடல்நலக் காப்பீட்டை எடுத்துக் கொண்டால், தேவைப்படும் போதெல்லாம் எந்த வித சிக்கலும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.
சிறந்த காப்பீட்டை தேர்ந்தெடுக்க உதவும் டிப்ஸ்
கிளெய்ம் செய்யும் போது பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் மருத்துவ செலவை கிளெய்ம் செய்யும் போது காப்பீட்டு நிறுவனங்கள் பல சூழ்நிலைகளில் சிக்கல்களை உருவாக்குகின்றன. எனவே, புதிய சுகாதார காப்பீட்டை எடுப்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இன்று இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குடும்பத்தின் மருத்துவ வரலாறு
சரியான மருத்துவக் காப்பீட்டை வாங்குவதற்கு முன், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை நிச்சயமாகச் சரிபார்க்கவும். இது உங்களுக்குத் தேவையான காப்பீடு வகை குறித்த தெளிவைத் தரும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் தேர்வு செய்யவும்.
காத்திருப்பு காலம் என்னும் வெயிட்டிங் பீரியட்
மருத்துவக் காப்பீட்டில் காத்திருப்பு காலம் உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மருத்துவ செலவை கிளெய்ம் செய்ய முடியாது. எனவே, புதிய உடல்நலக் காப்பீட்டை எடுப்பதற்கு முன், இந்தக் பாலிசியில் எத்தனை நாட்கள் காத்திருப்பு காலம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் 30 நாட்கள் கால அவகாசத்தை ஏற்றுக்கொள்கின்றன.
க்ளைய்ம் செட்டில்மென்ட்
நீங்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கும் நிறுவனத்தின் க்ளைய்ம் செட்டில்மென்ட் என்ன என்பதை அறிந்து கொள்வது முக்கியம்? ஒரு நிறுவனத்தின் க்ளைய்ம் செட்டில்மென்ட் விகிதம் குறைவாக இருந்தால், பின்னர் க்ளெய்மின் போது சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, அதிக கவரேஜ் வழங்கும் ஒரு நல்ல நிறுவனத்திடமிருந்து புதிய சுகாதார காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிரீமியம் காப்பீடு இருப்பு
குறைந்த பிரீமியத்துடன் பாலிசியை எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இதன் காரணமாக, சில முக்கியமான அம்சங்கள் அதில் இல்லாமல் இருக்கலாம். இதன் காரணமாக, ஒரு பெரிய நோய் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவமனை பில், அதிக கவரேஜ் கிடைக்காமல் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
நெட்வொர்க் மருத்துவமனை
மருத்துவக் காப்பீட்டை எடுப்பதற்கு முன், அந்த நிறுவனத்திற்கு எத்தனை நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன என்பதைப் பாருங்கள். நெட்வொர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், நீங்கள் பணமில்லா சலுகையைப் பெறலாம். எனவே, அதிக நெட்வொர்க் மருத்துவமனைகளைக் கொண்ட நிறுவனத்தின் காப்பீட்டு கொள்கை சிறப்பாக இருக்கும்.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கான கவரேஜ்
பெரும்பாலான மருத்துவ காப்பீடுகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கும். ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், அறுவை சிகிசைக்கு பிறகு தேவைப்படும் பிஸியோதெரபி போன்ற, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை உள்ளடக்கும் காப்பீட்டு திட்டத்தை வாங்கவும்.