ரயில் டிக்கெட் புக் செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறுவது எப்படி?

Train Ticket : ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறமுடியுமா? என்றால் முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 4, 2025, 10:42 AM IST
  • ரயில் டிக்கெட் புக்கிங் ஐடியா
  • கடைசி நேர பயணம் செல்கிறீர்களா?
  • உங்களுக்கு இருக்கும் வாய்ப்பு
ரயில் டிக்கெட் புக் செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறுவது எப்படி?

Train Ticket Booking New Trick : இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல சூப்பரான அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. அது டிக்கெட் முன்பதிவில் தொடங்கி, பயணத்தின்போது பாதுகாப்பு, உணவு டெலிவரி, மருத்துவ உதவி மற்றும் பயண நிலையத்தில் இறங்கிய உடன் ஓய்வு எடுக்க தேவையான வசதி, அங்கிருந்து புறப்பட்டு கிளம்ப தேவையான குளியலறை வசதி வரை எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுகிறது. முடிந்தளவுக்கு எல்லா இடங்களிலும் டெக்னாலஜி மூலம் ரயில் பயணிகளுக்கான தேவையை மிக விரைவாக  வழங்க வழிவகை செய்து வருகிறது இந்திய ரயில்வே. அதில் பிரதானமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை ரயில் டிக்கெட் முன்பதிவு தான்.

Add Zee News as a Preferred Source

ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் சில நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால் நீங்கள் செல்லும் ஊருக்கான டிமாண்டை பொறுத்து உங்களுக்கு ரயில் பயணத்தில் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும். முன்பதிவு செய்யும்போது சில நேரங்களில் நீங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த காத்திருப்பு டிக்கெட் கடைசி நேரத்தில் ஆர்ஏசி அல்லது முன்பதிவு இருக்கையாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் செல்லும் ஊருக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறீர்கள், உங்களுக்கு முன்னால் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து உங்களுடைய டிக்கெட் கன்பார்ம் ஆகும். 

ரயில் முன்பதிவு டிக்கெட்டை பொறுத்தவரை பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என முன்னுரிமை  அடிப்படையிலும் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்காகவும் ரயில்வே பிரத்யேகமாக டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. அதேநேரத்தில் கடைசி நேரத்தில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் அவசர தேவைக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் ரயில்வே கருத்தில் கொண்டு அவர்களுக்காக சில சீட்களையும் ஒதுக்கும் வகையில் கரண்ட் புக்கிங் ஆப்சனை வைத்திருக்கிறது. ரயில் நிலையத்தில் கடைசி நேரத்தில் சென்று, அதாவது ரயில்வே சார்ட் தயாராவதற்கு முன்பு அல்லது ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட நேரடியாக கரண்ட் புக்கிங் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதையும் செய்ய முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் நார்மல் டிக்கெட் எடுத்துக் கொண்டு நேரடியாக முன்பதிவு பெட்டிகளில் ஏறிக் கொள்ள வேண்டும். அங்கு டிக்கெட் பரிசோதகரிடம் சாதாரண டிக்கெட்டை கொடுத்து, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கள் காலியாக இருந்தால் ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கலாம். அப்போது அவர் சீட்களின் நிலையை ஒருமுறை ஆராய்ந்து, ஏதேனும் சீட் காலியாக இருந்தால் அந்த சீட்டை உங்களுக்கு ஒதுக்கி கொடுப்பார். இப்படியும் ரயில் பயணத்தில் முன்பதிவு சீட்டில் பயணிக்கலாம்.

மேலும் படிக்க | சென்னை : பயணிகள் பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் வரப்போகும் புது ரூலஸ்..!

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு எத்தனை கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு? - முழு தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News