)
Indian Railway Tatkal Ticket News: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல்முறை பெரும்பாலும் பயணிகளுக்கு மலையேறுவது போன்றது, ஏனெனில் இதை புக் செய்து மிகவும் கடினமான செயலாகும். ஆனால் இனி இது தொடர்பான கவலை உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஒவ்வொரு முறையும் தட்கல் டிக்கெட்டை புக் செய்ய முடியாமல் தவித்தால், இதோ உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் ரயில்வே அமைச்சகம் சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி இப்போது IRCTC கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயணிகளுக்கு முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படும். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இப்போது பொது பயணிகள் முகவர்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் IRCTC கணக்கை ஆதாருடன் இணைக்கவும்
உங்கள் ஆதார் அட்டையை IRCTC கணக்குடன் இன்னும் இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்யுங்கள். இந்த செயல்முறையை உடனடியாக முடித்து புதிய வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான செயல்முறை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்..
IRCTC கணக்கை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது?
முதலில் உங்கள் தொலைபேசி அல்லது லேப்டாப் இல் இருந்து www.irctc.co.in என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்.
இப்போது உங்கள் IRCTC பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு உள்நுழையவும்.
உள்நுழைந்த பிறகு, "My Account" பகுதிக்குச் சென்று "Authenticate User" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் உங்கள் 12 இலக்க ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு உங்கள் ஆதார் தகவல் திரையில் தோன்றும், இது உங்கள் IRCTC சுயவிவரத்துடன் பொருந்த வேண்டும். தகவல் பொருந்தவில்லை என்றால், "Edit" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அதை சரிசெய்யவும்.
தகவல் சரியாக இருந்த பிறகு, "Verify details and receive OTP" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
கொடுக்கப்பட்ட பெட்டியில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து "Submit" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ஆதார் இணைப்பு முடிந்ததும், திரையில் ஒரு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். இதற்குப் பிறகு, IRCTC வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழையவும், "Authenticate User" பிரிவில் பச்சை நிற டிக் ஒன்றைக் கண்டால், உங்கள் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ