Fancy Vehicle Number Tamilnadu : புதிதாக வாகனங்கள் வாங்கும் பலரும் தங்கள் வாகனங்களுக்கு பேன்சி எண்கள் வேண்டும் என விரும்புவார்கள். அதனை பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட வாகனத்திற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தனித்துவமான பதிவு எண் ஒதுக்கப்படுகிறது. வழக்கமாக இந்த எண்கள் தோராயமாக வழங்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விருப்ப எண்ணை (Fancy Number) விரும்பினால், அரசு விதிமுறைகளின்படி அதைப் பெறலாம். இங்கே விருப்ப எண்களைப் பெறுவதற்கான முழு செயல்முறை, கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
விருப்ப எண் வகைகள்
1. சாதாரண விருப்ப எண்கள் (தற்போதைய தொடரில் உள்ள எண்கள்)
2. முன்னுரிமை (Advance) எண்கள் (எதிர்கால தொடர்களில் வரும் எண்கள்)
3. அரசு ஒதுக்கிய ஃபேன்சி எண்கள் (சிறப்பு எண்கள்)
1. சாதாரண விருப்ப எண்களைப் பெறுவது எப்படி?
உங்கள் விரும்பிய எண் தற்போதைய தொடரில், அதாவது அரசு இப்போது ஒதுக்கும் நம்பர் சீரிஸில் 1000 எண்களுக்குள் இருந்தால், நீங்கள் அதை நேரடியாக RTO-வில் விண்ணப்பிக்கலாம். இரு சக்கர/மூன்று சக்கர வாகனங்கள் பேன்சி எண்களைப் பெற ₹2,000 கட்டணம் செலுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனம் ரூ. 4 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்கள் ₹10,000 செலுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனம் ₹4 லட்சத்திற்கு மேல் இருந்தால் ₹16,000 செலுத்த வேண்டும்.
2. முன்னுரிமை (Advance) மற்றும் அரசு ஒதுக்கிய ஃபேன்சி எண்கள்
நீங்கள் விரும்பிய எண் தற்போதைய தொடரில் 1000 எண்களுக்கு அப்பால் இருந்தால், அல்லது முன்னுரிமை தொடர்/அரசு ஒதுக்கிய ஃபேன்சி எண்ணாக இருந்தால், CMVR படிவம்-21 ஐ நிரப்பவும். விற்பனைச் சான்றிதழின் நகல் சேர்க்கவும். கோரிக்கை கடிதம் எழுதவும். போக்குவரத்து துறையிடம் சமர்பிக்க வேண்டும். அரசு ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் விண்ணப்பித்த எண்கள் 4 சீரீஸ் வரை இருந்தால் ₹40,000, 5-8 சீரீஸ் வரை ₹60,000, 9-10 நம்பர் சீரீஸ் வரை ₹1,00,000, 11-12 சீரீஸ் வரை ₹2,00,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- பேன்சி எண்களுக்கான கட்டணம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
- டீலர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் (கூடுதல் கமிஷன் செலுத்த வேண்டியிருக்கும்).
- எண் பதிவு செய்த பிறகு RC, Insurance மற்றும் பிர்ஸ் கார்டைப் புதுப்பிக்கவும்.
- ஆன்லைன் ஏலங்களில் (BookMyNumber போன்ற தளங்கள்) போட்டியிட்டும் விருப்ப எண்களைப் பெறலாம்.
இந்தியாவில் பேன்சி வாகன எண்களைப் பெறுவது எளிதான ஒன்று தான். RTO விதிமுறைகளைப் பின்பற்றி, சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான எண்ணைப் பெறலாம்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.5000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா
மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









