மத்திய அரசு கொடுக்கும் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி - ரூ.30,000 லிமிட், மானியம் இருக்கிறது..!

PM Swanidhi Scheme Credit Card : மத்திய அரசு கிரெடிட் கார்டு கொடுக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளது. 30 ஆயிரம் ரூபாய் வரை கிரெடிட் கார்டு லிமிட் இருக்கும். கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 13, 2025, 11:59 AM IST
  • மத்திய அரசு கொடுக்கும் கிரெடிட் கார்டு
  • தெருவோர வியாபாரிகள் பயன்படுத்தலாம்
  • 30 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம்
மத்திய அரசு கொடுக்கும் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி - ரூ.30,000 லிமிட், மானியம் இருக்கிறது..!

Central Government Credit Card : கொரோனா காலத்தில், பிரதமர் நரேந்திர மோடி அரசு பல திட்டங்களைத் தொடங்கியது. அந்த நேரத்தில் தான் பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்மநிர்பர் நிதி (PM-Swanidhi) திட்டமும் தொடங்கப்பட்டது. கோவிட்-19 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெரு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் தெரு வியாபாரிகளுக்கு கடன்களை வழங்கி அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இயன்றளவு ஒத்துழைப்பு வழங்குவதாகும். இப்போது, இந்தத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கிரெடிட் கார்டுகளையும் வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டின் வரம்பு ரூ.30 ஆயிரம். 

Add Zee News as a Preferred Source

திட்டத்தின் விவரங்கள்

பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தத் திட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுவதாக அறிவித்தார். இப்போது பயனாளிகளுக்கு ரூ.30,000 வரம்புடன் UPI இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற தேவையான KYC ஆவணங்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது MNREGA அட்டை ஆகியவை ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படும்.

ரூ.50 ஆயிரம் வரை கடன்

பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், விற்பனையாளர்கள் மூன்று கட்டங்களாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.

முதல் தவணை - 12 மாதங்களுக்கு ரூ.10,000 வரை கடன்
இரண்டாவது தவணை - குறைந்தபட்சம் ரூ.15,000 மற்றும் அதிகபட்சம் ரூ.20,000, 18 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.
மூன்றாவது தவணை - குறைந்தபட்சம் ரூ.30,000 மற்றும் அதிகபட்சம் ரூ.36 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்

கடனைப் பெறுவதற்கு எந்த பிணையமோ அல்லது பாதுகாப்பும் தேவையில்லை.  மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்துதல் இருக்கும். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7% வட்டி மானியத்தை வழங்குகிறது, இது காலாண்டு அடிப்படையில் நேரடியாக பயனாளியின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கடன் காலக்கெடுவிற்கு முன் திருப்பிச் செலுத்தப்பட்டால், முழு மானியமும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும். கூடுதலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்யும் விற்பனையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் கிடைக்கும். தங்கள் கடனை சரியான நேரத்தில் மற்றும் முன்கூட்டியே திருப்பிச் செலுத்துபவர்கள் எதிர்காலத்தில் அதிக கடன் தொகைக்கு தகுதியுடையவர்கள்.

மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News