)
பெற்றோர்களுக்கும் இருக்கும் வீட்டு வேலைகளை விட, குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலைதான் மிகவும் சிரமமானதாக இருக்கும். அதிலும், இந்த சம்மர் வெக்கேஷன் தொடங்கி விட்டால் அவ்வளவுதான். “எப்போடா திரும்ப ஸ்கூல் திறக்கும்” என காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். அப்படி பள்ளி திறந்தவுடன், “என்னால ஸ்கூலுக்கு போக முடியாது..” என விழுந்து புரண்டு அடம்பிடிக்கும் குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாளலாம்? இங்கு சில வழிகள் இருக்கு, தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு பொதுவாகவே ஆர்வம் என்பது எல்லா விஷயங்களும் அதிகமாக இருக்கும். எனவே பள்ளிக்கு செல்ல ஆடம் பிடிக்கும் குழந்தைகளிடம், உனக்கு லஞ்ச் பாக்ஸில் ஒரு கிப்ட் இருக்கு உங்களுக்கு ஸ்னாக்ஸ் வைக்க போறேன் என்பது போன்ற ஆர்வத்தை தூண்டும் விஷயங்களை வைக்க வேண்டும். இதுக்காகவே அவர்களும் முதல் ஆளாக பள்ளிக்கு கிளம்புவார்கள்.
தினமும் அவர்களை ஸ்கூலுக்கு போ போ சொல்லும்போது கண்டிப்பாக அதை மறுத்து அவர்கள் அடம் பிடிக்கலாம் செய்வார்கள். பள்ளிக்கு போக மாட்டேன் என்று விழுந்து திரண்டு அழுவார்கள். அப்போதுதான் நீங்கள் ரிவர்ஸ் சைக்காலஜியை உபயோகிக்க வேண்டும். “சரி, நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம். வீட்டிலேயே இருக்கணும். ஆனால் ஒரு நிபந்தனை. வெளியில் வேறு எங்கும் போக கூடாது, போன் பாக்க கூடாது, டிவி போடக்கூடாது என்று அவர்களை எண்டர்டெயின் செய்யும் அனைத்து விஷயங்களும் இருக்கக் கூடாது என்று கூறி பாருங்கள். அவர்கள் ஸ்கூலுக்கு கிளம்ப வாய்ப்புள்ளது.
குழந்தைகள் பலருக்கு, அலாரம் சத்தத்தை கேட்டால் அலர்ஜியாக இருக்கும். பெற்றோர்கள் கத்தி கத்தி எழுப்பினாலும், அவர்களை பகையாளிகள் போல பார்ப்பார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த பாடலை சத்தமாக வைத்து எழுப்பலாம். டான்ஸ் ஆடவாவது எழுந்துக்கணும்ல?
நம்மில் பலர், குழந்தைகளுக்கும் பெரியோர்களைப் போல பொறுப்புகள் கொடுத்து பொறுப்பாக நடந்து கொண்டு சொன்னால் அதை அவர்கள் சரியாக செய்ய வாய்ப்பிருக்கிறது. அவர்களுடைய வேலைகளை செய்ய சொல்வது, அவர்களுக்கான உடைமைகளை பொறுப்பாக எடுத்து வைத்துக் கொள்ள சொல்வது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு சுமையாக அல்லாமல் பொறுப்பானதாக இருக்கும். இதனால் அவர்கள், “நம்ம பெரிய ஆள் ஆயிட்டோம்”என்கிற நினைப்போடு சீக்கிரமாக கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.
வெக்கேஷன்ல ஸ்கூலை முழுசா மறந்திருந்த நினைவில் குழந்தைகள் இருப்பார்கள். அதனால், ஸ்கூல் திறக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சும்மா அந்த வழியா கூட்டிட்டுப் போய், "உன் ஸ்கூல், உன் கிளாஸ் ரூம், அங்க விளையாடின கிரவுண்ட்" இதையெல்லாம் காட்டி, பழைய ஞாபகங்களை வரவழைக்கலாம்.
திடீரென ஒரு நாள் காலையில் எழுப்பி "இன்னைக்கு ஸ்கூல்"என்று சொன்னால் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், ஒரு வாரம் முன்கூட்டியே வீட்ல ஒரு சார்ட் பேப்ரில் 'இன்னும் 5 நாட்கள் இருக்கு', 'இன்னும் 4 நாட்கள் இருக்கு' என்று லீவ் முடிவதை ஒரு கேம் போல கவுண்ட் பண்ண வைக்கலாம். இது அவங்க மனசை கொஞ்சம் கொஞ்சமா ஸ்கூலுக்கு செல்ல தயார் செய்யும்.