How To Handle Someone Who Is Attacking You : மனிதர்கள் பல நேரங்களில் பலதரப்பட்டவர்களாக மாறுவார்கள். சமுதாயத்தின் படி உயர்வாக இல்லாதவர்களை ஒரு மாதிரியாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவரை வேறு மாதிரியாகவும் நடத்தக்கூட இவர்கள் தயங்குவதில்லை. இன்னும் பல நமக்கு நண்பராக இருந்து கொண்டே நம்மை பர்சனலாக அட்டாக் செய்ய காத்துக் கொண்டிருப்பர். அதை ஜோக்காக, நம்மை புகழ்வது போல் பழித்து கூறுவர். இவர்களை பல சமயங்களில் நமக்கு எப்படி சமாளிப்பது என்று தெரியாது. அப்போது அவர்கள் அப்படி பேசும் போது, அதை கேஷுவலாக எடுத்துக்கொண்டு கடந்திருப்போம். ஆனால், நான் மனதிற்குள் ஏதோ ஒரு இடத்தில் உருத்திக் கொண்டே இருக்கும். அடுத்த முறை அவர்களை இப்படி செய்யும் போது, நீங்கள் அவர்களை ஸ்மார்ட் ஆக சமாளிக்கலாம். எப்படி தெரியுமா?
விளக்கம் கேளுங்கள்:
ஒருவர் உங்களை, அவர்களின் ஜோக்கை வைத்து அட்டாக் செய்ய நினைத்தால், நீங்கள் திரும்ப பேசுவதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு அப்படியே வரை பார்க்க வேண்டும். பின்னர், “நீங்கள் கூறியதை கொஞ்சம் விளக்க முடியுமா?” என்று கேட்க வேண்டும். ஒரு சில நேரங்களில் மனிதர்கள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யோசித்து பேச மாட்டார்கள். அவர்கள் வேறு ஒரு அர்த்தத்தில் கூறியிருந்தாலும், நாம் அதை தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களிடம் முதலில் விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள் உண்மையில் தவறாக கூறியிருந்தார்கள் என்றால் தங்களின் பேச்சை மாற்றிக்கொள்ள நினைப்பர்.
எல்லைக்கோடு:
ஒரு சிலர், அவர்களின் ஜோக் நம்மை புண்படுத்துகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள். இது போன்ற கமெண்ட்கள் அதிகரிக்கும் வேளையில் கனிவாக அவர்களிடம் எல்லை கோடுகளை போட வேண்டும். அவர்களிடம் நேரடியாக, “அப்படி பேசுவது எனக்கு அசௌகரிமாக இருக்கிறது” என்பதை கூற வேண்டும். நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை இழக்க வேண்டாம், அந்த உறவு விட்டுப் போகக் கூடாது என்று நினைத்தால் நீங்கள் இவ்வாறு எல்லை கோடுகளை நிர்ணயிப்பது அவசியம்.
மேலும் படிக்க | வறட்டு இருமல் பிரச்சனையா? உடனடி தீர்வு பெற எளிமையான 5 வழிகள்!
நடுநிலையான பதில்கள்:
உங்களைப் பற்றி ஒருவர் உங்களிடமே வஞ்சத்துடன் பேசி கமெண்ட் செய்கிறார் என்றால், அதற்கு ஒன்று பதில் கொடுக்காமல் இருக்க வேண்டும். அல்லது, நடுநிலையாக பதிலடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் உங்களை வைத்து ஜோக் செய்வதை போல நீங்களும் அவரை வைத்து ஜோக் செய்ய தெரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கே அவர்கள் செய்த தவறை உணர்த்தும். இதனால் அவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
தனிமையில் கூறவும்:
அவர்கள் எப்போதும் சொன்ன ஒரு ஜோக், அல்லது உங்களை பற்றி பேசிய கருத்து உங்கள் மனதில் பல நாட்களாக நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தால், அது குறித்து நீங்கள் அவரிடம் நேரடியாக பேசலாம். பலர் முன்னணியில், இது குறித்து பேசும் போது அவருக்கு அவமானமாக இருக்கலாம். அந்த பேச்சு சண்டையாக கூட முடியலாம். எனவே, அந்த உறவை ஹெல்தியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்தால் இது குறித்து தனிமையாக பேச வேண்டும்.
மேலும் படிக்க | வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ