எத்தனை வயதானாலும் படுக்கையறை சுகம் நிலைத்து நிற்க வேண்டுமா? ‘இதை’ பண்ணுங்க..

How To Keep The Honeymoon Phase Alive : எத்தனை வயதானாலும், படுக்கையறை சுகத்தை அதிகரிக்க வேண்டுமா? இதோ அதற்கான சிம்பிள் டிப்ஸ்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 3, 2025, 08:59 PM IST
  • உடலுறுவு டிப்ஸ்!
  • கெமிஸ்ட்ரியை அதிகரிக்க..
  • ஜோடிகள் என்ன செய்ய வேண்டும்?
எத்தனை வயதானாலும் படுக்கையறை சுகம் நிலைத்து நிற்க வேண்டுமா? ‘இதை’ பண்ணுங்க..

How To Keep The Honeymoon Phase Alive : திருமணமான புதிதில், அனைவருக்கும் ஹனிமூன் காலம் என்ற ஒன்று இருக்கும். இந்த காலத்தில், படுக்கையறை சுகமும், தங்கள் பார்ட்னருடன் இன்பமாக பொழுதை கழிப்பதும் அதிகமாகவே இருக்கும். ஆனால், இதற்கு பிறகான காலம்தான், அனைத்து கப்புள்களுக்கும் கடினமான காலமாக அமையும். அதன் பிறகான காலத்தில், படுக்கையறை சுகம் சரியாக இல்லை என்றால், எந்த சுகத்தையும் சரியாக அனுபவிக்க முடியாது. அதை தக்கவைத்துக்கொள்ள சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

காதலை அழியாமல் வைத்துக்கொள்ள வேண்டும்!

அடிக்கடி டேட்டிங் செல்ல வேண்டும். முதல், முறை உங்கள் ஆளை பார்க்க எப்படி செல்வீர்களோ, அதே போல் அப்போது உடை உடுத்த வேண்டும்.

இருவரும், இருவருக்கும் பிடித்த சர்ப்ரைஸ் கிஃப்ட்களை வாங்கி கொடுக்க வேண்டும். முடிந்தால் காதல் கடிதங்களை எழுதி கொடுக்கலாம்.

தினசரி ரொட்டீனில் இருந்து தப்பிக்க, எங்காவது வெக்கேஷனுக்கு செல்லலாம். இது, உங்களுக்கு ஒரு நல்ல ரொமாண்டிக் அனுபவமாகவும் இருக்கும்.

உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம்:

உங்கள் உடலின் ஆசை குறித்தும், காதல் குறித்தும் நன்கு மனம் விட்டு பேச வேண்டும். உங்களது கற்பனைகள், ஆசைகள், இச்சைகள் என அனைத்தையும் பேச வேண்டும்.

தினமும் மெசஜ் மூலமாக, அல்லது நேரில் flirt செய்ய வேண்டும். காமம் அல்லாத் தொடுதல், காமத்தோடு பேசுதல் உள்ளிட்ட விஷயங்களை செய்ய வேண்டும்.

இருவரும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கோ, பேசுவதை கேட்பதற்கோ சரியான நேரம் ஒதுக்க வேண்டும். இதனால், உங்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் அதிகரிக்கும்.

படுக்கையறையில் செய்ய வேண்டியது:

தினசரி, உங்கள் உடலுறவில் இருக்கும் விஷயத்தை தாண்டி புதிதான விஷயங்களை செய்ய வேண்டும்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், இசையுடன், இருட்டில் என சில புதுமையான விஷயத்தை செய்து முட் செட் செய்ய வேண்டும்.

உடலுறவுக்கு முன்னர், முன் விளையாட்டுகளை செய்ய வேண்டும். இதில் நீங்கள் கற்பனையாக என்னென்ன செய்ய வேண்டுமென நினைத்தீர்களோ, அனைத்தையும் செய்ய வேண்டும்.

உங்கள் பார்ட்னரை, புதிதான உடையுடன் சர்ப்ரைஸ் செய்யலாம். Lingerie, Bikini உள்ளிட்ட ஆடைகளை அணியலாம்.

முன் விளையாட்டுகள்:

எடுத்தவுடன் உடலுறவில் நுழைந்து விட்டால், அனைத்து எதிர்பார்ப்புகளும் முன்னரே முடிந்து விடும். எனவே, தொடுதல், மசாஜ், விளையாட்டாக பேசுதல் மூலம் அந்த எதிர்பார்ப்புகளை அதிகரிக்கலாம்.

முன் விளையாட்டுகள் மூலம் சூட்டை இன்னும் அதிகரிக்கலாம். மெதுவாக முத்தமிடுதல், நெருக்கமான தொடுதல், மசாஜ் செய்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றை செய்யலாம்.

ஒன்றாக ஷவர் செய்வது, டான்ஸ் ஆடுவது உள்ளிட்டவற்றின் மூலம் இன்னும் உங்களின் உடலுறவை அதிகரிக்கலாம்.

உடல் மற்றும் மன நலனை பார்த்துக்கொள்ளுதல்:

உங்களது உடல் நன்றாக இருந்தால், உடல் உறுப்புகளும் சரியானதாக இருக்கும். உடல் உறுப்புகள் என்று வருகையில், உங்களது பிறப்புறுப்பும் அதில் அடங்கும். எனவே, சரியான உடற்பயிற்சிகளை செய்து, நன்றாக சாப்பிட்டு, மன நலனையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த செல்ஃப்-கேர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மர்மத்தை உயிருடன் வைத்திருக்க வேண்டும்:

உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் உங்கள் பார்ட்னரிடம் சொல்லிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களை பற்றிய சில விஷயங்களை, உங்கள் பார்ட்னர் யூகித்துக்கொண்டே இருக்கும் வகையில், வைத்துக்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடலுறவு... ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வைத்துக்கொள்ள வேண்டும்?

மேலும் படிக்க | உடலுறவுக்கு முன் கண்டிப்பாக செய்ய வேண்டிய ‘அந்த’ 7 விஷயங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News