Benefits Of Walking: அனைவரும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறார்கள். இருப்பினும், உங்கள் ஆரோக்கியம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன குடிக்கிறீர்கள், மற்றும் நாள் முழுவதும் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. உதாரணமாக, சாப்பிட்ட பிறகு உடனடியாகப் படுத்துக் கொள்கிறீர்களா அல்லது நாள் முழுவதும் உட்கார்ந்திருக்கிறீர்களா போன்றவை ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க, சுறுசுறுப்பாக இருப்பது மிக மிக முக்கியம். இதற்கு, தினசரி நடைபயிற்சி மிகவும் அவசியம். ஆனால் இந்த நடைபயிற்சியை சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டுமா அல்லது சாப்பிடுவதற்கு முன் செய்ய வேண்டுமா?
சரியான நேரத்தில் நடப்பது இரத்த சர்க்கரை, எடை, செரிமானம் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகாலையில் வெறும் வயிற்றில் நடப்பது அல்லது உணவு உண்டப் பிறகு சிறிது நேரம் நடப்பது நன்மை பயக்கும். இருப்பினும், சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நடந்தால், உங்கள் உடல் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்த உதவுகிறது, இது எடை இழப்புக்கு துணைபுரிகிறது. மேலும், இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, காலையில் வெறும் வயிற்றில் நடப்பது உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஃபிரெஷ் காற்று, சூரிய ஒளி மற்றும் அமைதியான சூழல் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைத்து, பாசிட்டிவ் எண்ணத்தை அளிக்க உதவும்.
மக்கள் பெரும்பாலும் உணவு உண்டப் பிறகு நடப்பதை ஒரு சிறிய உடற்பயிற்சியாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த நடைபயிற்சி இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகள் உணவு உண்டப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இது உடலில் இருந்து குளுக்கோஸை தசைகளுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. சாப்பிட்ட பிறகு மக்கள் கனமாக உணரும் வாய்ப்பிருக்கிறது; இது செரிமானம் மோசமாக இருப்பதைக் குறிக்கலாம். சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வதால், உணவு மெதுவாகக் குடல் வழியாகச் செல்ல உதவுகிறது, மேலும் வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்கவும் உதவுகிறது. அதேபோல், இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு சிறிய நடைப்பயிற்சி செரிமானத்தை மேம்படுத்தி, அதனுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குறட்டை விடும் பார்ட்னர் பக்கத்தில் உறங்குவது எப்படி? இதோ சில டிப்ஸ்!
மேலும் படிக்க | முட்டை vs பன்னீர்! இரண்டில் அதிக புரோட்டின் எதில் உள்ளது? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









