How To Make Cashew Almond Pickle Receipe: இதுவரை நாம் அனைவரும் மாம்பழம், எலுமிச்சை, நாரதங்காய், மாவடு, பூண்டு போன்ற ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டிருப்போம். ஆனா முந்திரி, பாதாம் ஊறுகாய் சாப்பிட்டிருக்க மாட்டோம். நம்மில் பலர் இதன் பெயரைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த ஊறுகாய் கேட்டப்பதற்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் இது ஒரு தனித்துவமான மற்றும் சுவையான ஊறுகாய் ஆகும். குறிப்பாக நீங்கள் வித்தியாசமான ஊறுகாயை முயற்சிக்க விரும்பினால் இதை கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கவும். கொட்டைகளின் மொறுமொறுப்பான தன்மையும், மசாலாப் பொருட்களின் காரமான தன்மையும் சிறப்பு சுவையைத் தரும். உணவுடன் இதை சாப்பிட்டால் இன்னுமும் சுவையாக இருக்கும். இப்போது இந்த ஊறுகாயை எப்படி தயாரிப்பதும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
முந்திரி-பாதாம் ஊறுகாய் செய்முறை | Cashew-Almond Pickle Recipe:
தேவையான பொருட்கள்:
முந்திரி - 100 கிராம் (லேசாக வறுத்தது)
பாதாம் - 100 கிராம் (லேசாக வறுத்தது)
கடுகு எண்ணெய் - 1/2 கப்
கடுகு- 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெந்தய விதை - 1 தேக்கரண்டி
கலோஞ்சி (கருஞ்சீரகம்) - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (சுவைக்கேற்ப)
உப்பு - சுவைக்கேற்ப
வினிகர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
முந்திரி பாதாம் ஊறுகாய் செய்வது எப்படி | How to make Cashew Almond Pickle:
1. முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை தயார் செய்யவும்:
1. இரண்டையும் லேசாக வறுக்கவும், அதனால் அவை மொறுமொறுப்பாக இருக்கும். அதிகமாக வறுக்க வேண்டிய அவசியமில்லை, லேசாக வறுக்கவும்.
2. மசாலாவை தயார் செய்யவும்:
1. ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும், கேஸை அணைத்து, சிறிது ஆற விடவும்.
2. இப்போது அதில் பெருங்காயம், கடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம் மற்றும் கலோஞ்சி (கருஞ்சீரகம்) விதைகளைச் சேர்க்கவும்.
3. இவை வெடிக்க ஆரம்பித்ததும், அதனுடன் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்க்கவும்.
3. முந்திரி பாதாமைச் சேர்க்கவும்:
1. இப்போது இந்த மசாலாவுடன் வறுத்த முந்திரி மற்றும் பாதாமைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. இறுதிக்கட்ட பணி:
ஊறுகாய் நீண்ட நேரம் நீடிக்கவும் லேசான காரமான சுவையை பராமரிக்கவும் அதனுடன் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
5. கடைசி ஸ்டெப்:
1. ஊறுகாயை ஆற விடவும், பின்னர் அதை ஒரு சுத்தமான, உலர்ந்த கண்ணாடி ஜாடியில் நிரப்பவும்.
2. நன்றாகக் கலக்கும் வகையில் 2-3 நாட்கள் வெயிலில் வைக்கவும்.
இந்த முறைகள் மூலம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான ஊறுகாயை பெறலாம்.
மேலும் படிக்க | கோடைகாலத்தில் என்னென்ன சாலட் உணவுகள் சாப்பிடலாம், எப்படி செய்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









