No Sugar No Milk Healthy Chocolate Ice Cream: கோடை காலம் ஆரம்பானது, இந்த பருவத்தில் அனைவருக்கும் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களில் கெமிக்கல் நிறைந்திருக்கும். மேலும் அவற்றில் பால், சர்க்கரை மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் அதிகவில் நிறைந்திருக்கும். இவை அனைத்தும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், பால் மற்றும் சர்க்கரை பயன்படுத்தாமல், ஊட்டச்சத்து நிறைந்த சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் (Chocolate Icecream) ரெசிபியை நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆம், இதோ உங்களுக்காக ரெசிபி. இந்த ஐஸ்கிரீமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிடலாம். இந்த ரெசிபியின் சிறப்பு என்னவென்றால், இதில் இனிப்பு சுவைக்கு பேரீச்சம்பழம் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது முற்றிலும் ஆரோக்கியமானது.
சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரிக்க தேவையான பொருட்கள் | Ingredients needed to make chocolate ice cream
ஒரு கப் மக்கானா
அரை கப் ஊறவைத்த முந்திரி
அரை கப் ஊறவைத்த பாதாம்
ஒரு கோகோ பவுடர்
15-16 பேரீச்சம்பழம்
சாக்லேட் ஐஸ்கிரீம் செயல்முறை (Chocolate ice cream recipe) - முதலில் இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் (மக்கானா, ஊறவைத்த முந்திரி, ஊறவைத்த பாதாம், பேரீச்சம்பழம், கோகோ பவுடர்) போட்டு நன்கு அறைத்துக்கொள்ளவும். ஐஸ்கிரீமின் அமைப்பு நன்றாக இருக்க, பேஸ்ட் மிகவும் மென்மையாகவும், கிரீமியாகவும் இருக்க வேண்டும்.
இப்போது இந்தக் கலவையை காற்றுப் புகாத டப்பாவில் ஊற்றி, இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும். காலையில், உங்கள் சுவையான, குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட தயாராக இருக்கும். இந்த ஐஸ்கிரீமில் உள்ள மக்கானா குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது, முந்திரி மற்றும் பாதாம் ஆற்றலை அளிக்கிறது மற்றும் பேரீச்சம்பழம் இயற்கையான இனிப்புடன் இரும்பு சத்தை வழங்க உதவுகிறது.
முக்கிய குறிப்பு:
பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது.
மேலும் படிக்க | கோடைகாலத்தில் என்னென்ன சாலட் உணவுகள் சாப்பிடலாம், எப்படி செய்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ